Senthil balaji remand நீடிப்பு judge அல்லி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 4 தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 தேதி கைது செய்யது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகின்றார்.

அவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதனையடுத்து புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அங்காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜார்படுத்தபட்டார்.

இதனையடுத்து செந்தல் பாலாஜி நீதிமன்ற காவலை ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இன்று நீதிமன்ற காவல் நீட்டிப்பதன் மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13 ஆவது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது.

You may also like...