Sidda docters case. Mhc chief order

சித்த, ஆயுர்வேத, யுனானி உள்ளிட்ட மருத்துவர்கள் ஆலோபதி மருத்துவ சிகிச்சையை வழங்கலாம் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்த, ஆயுர்வேத, நீரோபதி, யுனானி மருத்துவர்களுக்கு நவீன அறிவியல் மருத்துவமான அலோபதி சிகிச்சையை வழங்கலாம் என்று அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதை தள்ளுபடி செய்து கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 14ல் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி எஸ். வி. கங்காபுர்வாலா, நீதிபதி டி .பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்திய டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் வக்கீல் ஆனந்த் டேவிட் ஆஜராகி, இந்த அரசாணை குறித்து எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உள்ளார். அதுவும், பிற வழக்குகளுடன் சேர்ந்து இந்த வழக்கையும் விசாரித்து, அந்த வழக்குகளுடன் இதையும் தள்ளுபடி செய்து விட்டார் என்று வாதிட்டார்.

மேலும் தன் வாதத்தில், என்ன காரணத்துக்காக வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்ன காரணத்துக்காக இந்த அரசாணை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விவரங்களையும் நீதிபதி தீர்ப்பில் கூறவில்லை. அரசாணையை எதிர்க்கும் மனுதாரர் தரப்பு காரணத்தையும் கேட்கவில்லை. எனவே, தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி தனி நீதிபதிக்கு அனுப்பி வைத்தும் உத்தரவிட்டனர்.

You may also like...