State pp ஜின்னா. ஆஜராகி. அமர் பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்

அமர் பிரசாத் ரெட்டியை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கக் கூடாது என உள்துறைச் செயலாளர், செங்கற்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர், தாம்பரம் நகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்திரவிட வேண்டும் என்று அவரது மனைவி நிரோசா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி திரு ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது தமிழக அரசின் சார்பில் மாநிலத் தலைமைக் குற்றவியல் அரசு வழக்குறைஞர் அசன் முகம்மது ஜின்னா மற்றம் கூடுதல் குற்றத்துறை வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.
மாநிலத் தலைமைக் குற்றவியல் அரசு வழக்குறைஞர் அசன் முகம்மது ஜின்னா, அமர் பிரசாத் மனைவி தாக்கல் செய்த இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல. உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவு போடுவதற்கு முன்பாக அதனைத் தடுக்கும் வகையில் அதிகாரிகளுக்கு உத்திரவிட முடியாது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் மனுதாரரரின் கணவர் அமர் பிரசாத் ரெட்டியை தற்சமயம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். அதனை ஏற்றுகொண்ட நீதிபதி அவர்கள் மேற்படி மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தள்ளுபடி செய்து உத்திரவிட்டார்.

You may also like...