Temple case RMDJ. Bench order

கோவில் சீரமைப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற குழுவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என இணையதளத்தில் வெளியிட முடியுமா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் உயர் நீதிமன்றம் 75க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டனர். அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்திவிட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கோரிக்கைகள் தொடர்பாக தொல்லியல் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில், கோவில் மற்றும் அதன் புராதன பொருட்கள் பாதுகாப்பு, புனரமைப்பு போன்றவை தொடர்பான வழக்குகளில் அமைக்கப்பட்ட குழுக்களின் ஒப்புதல் இல்லாமல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக அப்போது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி முறையிட்டார்.

ஆனால் நீதிபதிகள், கோவில்கள் சீரமைக்க உயர் நீதிமன்ற அளவிலான குழுவே 370க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

கோவில்களை சீரமைக்க உயர் நீதிமன்ற குழுவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என இணையதளத்தில் வெளியிட முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...