Thiruvannamalai temple case Rmdj bench order

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் எதிரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் அறநிலையத் துறை நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து தடை உத்தரவு அமலுக்கு வருவதாக உத்தரவிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கிழக்கு பகுதியில் உள்ள ராஜ கோபுரத்திற்கு எதிரில் 6 கோடியே 40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு, பொதுப் பணித் துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வணிக கட்டிடத்தை வாடகைதாரர்கள் ஆக்கிரமித்து இருந்ததால், அவர்களிடம் இருந்து, மீட்கப்பட்ட இடத்தில் கூடுதலான மாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால், கோபுரம் மறைக்கப்படும் என பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

எனவே, இந்த கட்டிட பணிகளால், அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜ கோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால், கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

கோவில்கள் மற்றும் புராதன சின்னங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி P.D.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் T.ரமேஷ்,
and 2 others ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக அவசர முறையீடு செய்தனர்.

அப்போது அறநிலையத் துறை தரப்பில் அப்போது அறநிலையத் துறை தரப்பில் ராஜ கோபுரம் எதிரில் ஏறத்தாழ 6 கோடி ரூபாய் செலவில் வட கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் 150 கடைகளை கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாகவும், இதனால் கோவிலின் ராஜ கோபுரத்தை தரிசிப்பதோ, ராஜகோபுரத்தின் கட்டுமானமோ பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோபுரத்தை மறைக்கும் வகையில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்கு உடனடியாக தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர். இந்த தடை உத்தரவு பிறப்பித்த பிற்பகல் 2 மணி 40 நிமிடத்தில் இருந்து, எந்தவித கட்டுமான பணிகளிலும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறித்தி உள்ளனர்.

You may also like...