அப்பாவி மலைவாழ் மக்கள் 22 பேர் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து அதிமுக நடத்த இருந்து ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்த திமுக அரசின் காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் திட்டமிட்டபடி நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கடம்பூர் கூத்தம்பாளையம் ஊராட்சி மார்க்கம்பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் செயல்பட்டு வருகிறது. இதில் மலைவாழ் மக்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். இதனை சீர்குலைக்கும் நோக்கத்தோடு திமுக பிரமுகர் சண்முகம் என்பவருக்கும் கோவில் ஆக்கிரமிப்பு செய்யும் உள்நோக்கத்தோடு குறிப்பாக கோவிலின் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அராஜகத்தில் ஈடுபட்டதோடு, ஏற்கனவே கோவிலை நிர்வகித்து வரக்கூடிய மலைவாழ் மக்கள் உள்ளிட்ட 22 பேர் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் சண்முகம் அளித்த பொய் புகாரில் போலீசார் கோவிலின் நிர்வாகித்து வந்த மலைவாழ் மக்கள் தலைவர் உட்பட 22 அப்பாவி மலைவாழ் மக்கள் மீது பினையில் வர முடியாத 506(i), 143, 294(b), 341, 452 உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் என்று வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் பொய் புகார் அளித்து வழிக்கு பதிவு போட வைத்த திமுக பிரமுகர் சண்முகம் மற்றும் திமுக அரசு திமுக அரசின் காவல்துறையை கண்டித்து 08/02/2024 அன்று கடம்பூர் பேருந்து நிலையம் முன்பு அதிமுக பவானிசாக சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி தலைமையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதியசர் ஆனந்த் வெங்கடேசன் தலைமையிலான அமர்வில் இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக ஆட்சிக்காலத்தில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தவில்லையா என்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு எதற்காக வெளியில் வர முடியாத 506(i) சட்டப்பிரிவை எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் திட்டமிட்ட படி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து திட்டமிட்ட படி 8. 2. 2024 வியாழக்கிழமை பத்ரகாளியம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக மலைவாழ் மக்கள் 22 பேர் மீது பொய் வழக்கு போட்ட திமுக காவல்துறை திமுக அரசை கண்டித்து நாளை சின்னசாலை டீ ஷாப் அருகே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. உயர் நீதிமன்றத்தில் கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திரு. E பாலமுருகன் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் C ஐயப்ப ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்

You may also like...