அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சி.கதிரவன் ஆஜராகி, டெண்டரின் போது உத்தரவாத தொகைக்காக வெளிநாட்டு வங்கியை இணைத்தால் அந்த வங்கியின் கிளை இந்தியாவில் செயல்பட வேண்டும் எனவும், இல்லையென்றால் ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

வெள்ள கட்டுப்பாட்டு மையம் அமைக்கும்
திட்டத்திற்கான டெண்டருக்கு
வெளிநாட்டு வங்கி
உத்தரவாதத்தை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது…

 

சென்னையின் உரிய தரவுகள் சேகரிப்பு மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டது. இதற்கு சேலத்தை சேர்ந்த எஸ்.எஸ். டெக் என்ற நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது.

டெண்டரின் போது செலுத்த வேண்டிய வங்கி உத்தரவாத தொகைக்காக இங்கிலாந்தை சேர்ந்த வங்கியை அந்த நிறுவனம் இணைத்திருந்தது.
இதனையடுத்து, இந்த உத்தரவாதத்தை அரசு ஏற்க மறுத்தது.

இதனை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சி.கதிரவன் ஆஜராகி, டெண்டரின் போது உத்தரவாத தொகைக்காக வெளிநாட்டு வங்கியை இணைத்தால் அந்த வங்கியின் கிளை இந்தியாவில் செயல்பட வேண்டும் எனவும்,
இல்லையென்றால் ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார். இல்லையென்றால் உள்ளூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கியிடம் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார். இந்த விதிமுறைகளை எஸ்.எஸ். டெக்பின்பற்றவில்லை என தெரிவித்தார்.

இதற்கு நிறுவன தரப்பு வழக்கறிஞர், தங்களுடைய வசதிகேற்ற வகையில் தான் வெளிநாட்டு வங்கியின் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் உத்தரவாதம் நிராகரிக்கப்பட்டது தவறு எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து , எஸ்.எஸ். டெக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி, அரசின் உரிய நிபந்தனைகளை மனுதார ர் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

You may also like...