எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தரப்பிதிரையரங்களில் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார். மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்

குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த
1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது.

இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தூது திரையரங்களில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தரப்பிதிரையரங்களில் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார். மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்களில் மறு வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒரு நியமித்து, திரையரங்கில் குணா மறு வெளியீடு வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.

You may also like...