கள்ளகுறிச்சி மாணவி வழக்கு , கனல் கண்ணன் வழக்கு மீராமிதூன் வழக்கு

[8/29, 10:49] Sekarreporter1: கனல் கண்ணன் ஜாமீன் மனுவில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

வழக்கு செப்டம்பர் 1 தள்ளிவைப்பு

நீதிபதி இளந்திரையன

பெரியார் சிலை உடைப்பு குறித்து இந்து முன்னணி மாநாடு நிகழ்ச்சியில் பேசியதாக தபெதிக வழக்கில் ஆகஸ்ட் 15ல் கனல் கண்ணன் கைது
[8/29, 10:57] Sekarreporter1: பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் மனு குறித்து சென்னை காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென மூன்று முறை கடும் ஆக்ரோசமாக பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் ம் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோத் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழ்க்கு செப்டம்பர் 1ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார்.
[8/29, 12:19] Sekarreporter1: நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியாக உள்ள் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.
லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகெங்கிலும் திரைக்கு வரவுள்ளது. வரவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி, உள்ளிட்டோர் நடிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.

இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து, நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[8/29, 12:36] Sekarreporter1: தனியார் நகைக்கடன் வங்கிக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் ஜாமீன் கோரி மனுவிற்கு பதில் அளிக்க அரும்பாக்கம் காவல்துறைக்கு
சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான ஃபெட் பேங்கில் ஆகஸ்ட் 13ம் தேதி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அதே வங்கியில் பணியாற்றிய முருகன் தனது கூட்டாளியுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் கொள்ளை போன நகைகளில் 3.5 கிலோ நகைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த நகைகளை மீட்ட போலீசார், கொள்ளை போன நகைகளை மறைத்து வைக்க உதவியாக இருந்ததாக அமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஆய்வாளர் அமல்ராஜ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தான் ஒரு அப்பாவி எனவும் இந்த வழக்கில் காவல்துறை தன்னை தவறாக சேர்த்துள்ளதாகவும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனை ஏற்க தயாராக உள்ளதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு குறித்து சென்னை அரும்பாக்கம் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாணை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[8/29, 15:42] Sekarreporter1: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி மூன்று அறிக்கைகளை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்தார்.

பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த அறிக்கையில், மாணவி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 53 யூ டியூப் லிங்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 7 ட்விட்டர் பக்கங்களும், 21 பேஸ் புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வதந்தி பரப்பியதாக மூன்று வாட்ஸ் ஆப் குரூப்க்களின் அட்மின்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக 63 போலீசார் உள்பட 202 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர சுப்பு, ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், நேற்று முன்தினம் மாணவியின் தாய் முதலமைச்சரை சந்தித்து முறையீடு செய்தார். அதைக் கேட்ட முதலமைச்சர், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் மனுதாரர் தெரிவிக்கும் அச்சம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஜிப்மர் ஆய்வறிக்கை மற்றும் விசாரணை நிலை குறித்து அறிக்கை மனுதாரர் தரப்புக்கு வழங்க மறுத்த நீதிபதி, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் நியமித்த அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் மூலம் வதந்தி பரப்புவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[8/29, 16:31] Sekarreporter1: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்கவும், இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருக்கவும் நிபந்தனை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்… மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது… மாணவியின் தற்கொலை குறிப்பில் இருந்து கூட, ஆசிரியர்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை… நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம்… அதனால் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார்.

படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது… எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியைகள் கிருத்திகா ஹரிப்பிரியா ஆகியோர் நான்கு வாரங்களுக்கு சேலத்தில் தங்கி இருந்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன் பின் நான்கு வாரங்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்… விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நான்கு வாரங்களுக்கு மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்… அதன் பின் நான்கு வாரங்களுக்கு சி டி சி ஐ டி போலீசார் முன் தினமும் காலை மாலை நேரங்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், விசாரணைக்கு அழைக்கும் போது போலீசார் முன் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
[8/29, 17:13] Sekarreporter1: நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார்…..

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆஜர்படுத்தப்படுவார் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் உத்தரவாதம்

நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது

திரைப்படத் துறையில் பட்டியலின, பழங்குடியினர் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார்

சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்கில், சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மீரா மிதுனும் ஆஜராகாததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது

வழக்கு விசாரணை செப்டம்பர் 14 தள்ளிவைப்பு
[8/29, 17:14] Sekarreporter1: பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாக சென்னை காவல்துறை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத் துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்த தனது கருத்தை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர், பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சாட்சிகள் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இரண்டாவது குற்றவாளியான ஷாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜார் மீரா மீதுன் ஆஜராகவில்லை எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால், இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜரானர்.

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், பிடிவாரண்ட் மீரா மீதுன் எங்கு உள்ளார் என்பதை தேடி வருவதாகவும், தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதி நீதிபதி ஸ்ரீதேவி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
[8/29, 20:28] Sekarreporter1: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்றதை எதிர்த்து புதுவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தற்போது உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் முயற்சிப்பதாக கூறி, தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்ற உத்தரவுகளை ரத்து செய்யக் கோரியும் திமுக எம்.எல்.ஏ. சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை எந்த காரணமும் இல்லாமல் திரும்ப பெறப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை தேர்தல் ஆணையம் நடத்த முயற்சிப்பதால், அத்ற்கு தடை விதிக்கவேண்டும் என்று வாதிட்டார்.

புதுவை தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தல் நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ளதாகவும்,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அரசாணை ,துணை நிலை ஆளுநரின் அறிவுறுத்தலின்படியே திரும்ப பெறப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை அடையாளம் காண ,சம்பந்தப்பட்ட ஆணையத்தையும் வழக்கில் பிரதிவாதியாக சேர்த்து உத்தரவிட்டுள்ளது..
[8/29, 20:54] Sekarreporter1: தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கணியாமூர் மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி இளந்திரையன் உத்தரவில் மேலும் சில தகவல்களை பதிவு செய்துள்ளார்.

அதில், முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, பின்னர் இந்திய தண்டனை சட்டத்தின் மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு, போக்சோ சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை சேர்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

12ஆம் வகுப்பு என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால், குடும்ப சூழ்நிலை குறித்து சிந்திக்காமல், தன் மனதை படிப்பில் செலுத்தி நன்றாக பிள்ளைகள் படிப்பார்கள் என்று பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை உறைவிட பள்ளியில் சேர்க்கின்றனர் என உத்தரவில் பதிவு செய்துள்ளார்.

மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின்படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, நன்றாக படிக்கச் சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமாகுமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

இரண்டு முறை செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் தமிழக மருத்துவ குழு எடுத்த முடிவுகளை நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு ஏற்றுக்கொள்வதாக அதன் அறிக்கையிலிருந்து தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாகவும், அவ்வாறு பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் உடலில் இருந்ததாக அறிக்ககளில் இருந்து தெரியவருவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல என்றும், வண்ணப்பூச்சு என என நிபுணர்களின் அறிக்கை கூறுவதாகவும் நீதிபதி தன் உத்ததவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், வேதியியல் பாடம் படிப்பதில் உயிரிழந்த மாணவி சிரநப்பட்டு இருந்தது உறுதியாகி உள்ளதாகவும், அதே சமயம் இரு ஆசிரியைகள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்கொலைக்கு தூண்டி பிரிவில் வழக்குப் பதிவு செய்ததும் தவறு என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
[8/29, 22:07] Sekarreporter1: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் – சசிகலா,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் உள்ளிட்டவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரையை தொடர்ந்து விசாரணைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

You may also like...