சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள அரசு நிலத்திற்கு உரிமை கொண்டாட தோட்டக்கலை சங்கத்திற்கு உரிமை இல்லை என்று ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.

அரசு நிலத்தை
சொந்தம் கொண்டாட தோட்டக்கலை சங்கத்திற்கு உரிமையில்லை
சென்னை உயர் நீதிமன்றத்தில் காரசார வாதம்

சென்னை, ஆக. 30&
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள அரசு நிலத்திற்கு உரிமை கொண்டாட தோட்டக்கலை சங்கத்திற்கு உரிமை இல்லை என்று ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
செம்மொழி பூங்கா
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. டயோசிஸ் அலுவலகம் மற்றும் கதீட்ரல் தேவாலயம் அருகேயும், எதிரேயும் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை தோட்டக்கலை சங்கம் நீண்ட கால குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வந்தது. இதில் ஒரு பகு Ôடிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஒட்டல்Õ நிர்வாகத்துக்கு தோட்டக்கலை சங்கம் உள் குத்தகைக்கு விட்டது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து அரசிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டு, அதில் ஒரு பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இதற்கிடையே, செம்மொழிப் பூங்காவுக்கு எதிரேயுள்ள சுமார் 114 கிரவுண்ட் நிலத்தையும் அரசிடம் ஒப்படைக்கக் கோரி தி.மு.க., ஆட்சி காலத்தில், தோட்டக் கலை சங்கத்தின் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, சென்னை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார்.
பொறுப்பு அதிகாரி
இதை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, நிலம் யாருக்குச் சொந்தம் என்பதை உரிய ஆவணங்களைப் பரிசீலித்து மாவட்ட கலெக்டரே முடிவை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும். அந்த இடம் தோட்டக்கலை சங்கத்துக்கே சொந்தமானது என்று கலெக்டர் பொறுப்பு வகித்த அப்போதையை மாவட்ட அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் புவனேஷ்குமார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சாதகமாக உத்தரவு பிறப்பிக்கும் வகையில் சென்னை மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்து விட்டு, அப்பதவியில் பொறுப்பு அதிகாரியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தோட்டக்கலை சங்கத்துக்கே நிலம் சொந்தம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்று கூறியிருந்தார்.
உரிமை இல்லை
இந்த வழக்கு விசாரணையின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு நில நிர்வாக முதன்மைச் செயலாளர் தடை விதித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நில நிர்வாக முதன்மைச் செயலாளரின் உத்தரவை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, புவனேஷ்குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், பொறுப்பு கலெக்டர் பதவி வகித்த அதிகாரி நில உரிமை குறித்து முடிவு எடுக்க முடியாது. அதன் அடிப்படையில்தான் நில நிர்வாக முதன்மை செயலாளர் மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. மனுதாரர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, இந்த நிலத்தை சொந்தம் கொண்டாட எந்த உரிமையும் இல்லைÕÕ என்று வாதிட்டார்,
அவகாசம்
இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் வாதிட அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, விசரணையை செப்டம்பர் 7&ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
………………

You may also like...