கவர்னர் ஒப்புதல் pening bail தரலாம் add pp raj thilak துணிகர வாதம் bench granted bail

நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்காததால், 5 சிறைவாசிகளுக்கு ஜாமின் வழங்க ஆடசோபனை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீண்ட காலம் சிறையில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரிய வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் 49 சிறைவாசிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரையை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாகவும், அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டு,
உள்துறை செயலாளரின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறைவாசிகள் ஷாகுல் ஹமீது, அஸ்லாம் உள்ளிட்ட 5 பேரின் சார்பில் ஜாமினில் விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி,
சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக
அரசின் பரிந்துரை மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றம் இதே போன்ற மற்றொரு சிறைவாசி ஜாமின் வழக்கு விசாரனையின் போது ஆளுநரிடம் கோப்புகள் நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, மனுதாரர்களை ஜாமீனில் விடுவிக்க அரசுக்கு ஆட்சேபணையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து, மனுதாரர்கள்
5 பேருக்கு மூன்று மாத இடைக்கால நிபந்தனை ஜாமினில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

You may also like...