Admk two leaves case senior advocate angry

அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், வழக்கு தொடர்பாக பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யபடவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பன்னீர் செல்வம் தரப்பில், கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.ஒரு வருடமாக இமைதியாக இருந்துவிட்டு இப்ப அவகாச ம் கேட்பதற்கு எதுர்ப்பது ஏன் என்று  மூத்த ஙக்கீல் vijayanarayananனிடம் மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் angry பதில்

இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

You may also like...