சனாதன தர்மம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சாதி பாகுபாடு இன்றளவும் தொடர்கிறதா என்று மாண்பமை நீதிபதி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, உடனடியாக பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்கள், ஏகலைவன் தொடங்கி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரும், அதேபோன்று தற்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் வரையிலும் அனைவரும் சாதி பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர் என்றார்

சனாதன தர்மம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சாதி பாகுபாடு இன்றளவும் தொடர்கிறதா என்று மாண்பமை நீதிபதி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, உடனடியாக பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்கள், ஏகலைவன் தொடங்கி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரும், அதேபோன்று தற்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் வரையிலும் அனைவரும் சாதி பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர் என்றார். அத்துடன் இந்த பாகுபாடு சமூகத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது, நாம் அதைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது என்றும் கூறினார்..

மேலும், அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளபடி, டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு அரசியல் சாசன பதவி உள்ளதா என்று மாண்பமை நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திரு.பி.வில்சன் அவர்கள், தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ள திரு. கி.வீரமணி அவர்கள் மிகவும் மதிக்கப்படும், மரியாதைக்குரிய ஆளுமை என்றும், அவர் எந்த அரசியல் சாசன பதவியும் வகிக்கவில்லை என்றும் கூறினார்.. அத்துடன் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று, சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு உள்ளிட்ட அவரது கொள்கைகளை திமுக பின்பற்றி வருகிறது என்றும் திரு.பி.வில்சன் அவர்கள் வாதிட்டார்.

You may also like...