சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும் கோயில் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது எனவும்,

தமிழகத்தில், அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், அர்ச்சகர்கள் நியமன நடவடிக்கையை மற்றும் அறநிலையத்துறை பணிநியமன விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளில் வருகிற திங்கள் கிழமை 22.08.2022 அன்று தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு உத்திரவு பிறப்பிக்க உள்ளது.

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும் கோயில் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது எனவும், இதனை இரத்து செய்ய கோரியும் வாதிட்டார். மேலும் அரசு நடத்தும் அர்ச்சகர் அரசு பள்ளியின் சான்றிதழ் ஆனது, ஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோயிலுக்கு பூஜை செய்ய தகுதி கொடுக்காது எனவும் வாதிட்டார்.

மேலும் எந்தெந்த கோயிலில் எந்த ஆகமம் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதனை அறிய அமைக்கப்படும் குழு முடிவினை பொறுத்து ஆகம கோயில்களை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

அர்ச்சகர்கள் பணி நியமனங்கள் சேஷம்மால் மற்றும் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் படி / பின்பற்றி செய்யவேண்டும். தவறும் பச்சத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக அர்ச்சகர்களை நியமனம் செய்யபட்டு இருக்குமேயானால்,
பாதிக்கப்பட்ட நபர் எவருக்கும் எவர் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்க நீதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் பரிந்துரையின் அடிப்படையிலேயே ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்து சமய அறநிலையத் துறை பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும், பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாகவே கருதப்படுகிறார்கள் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிபிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 22ம் தேதி இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்கிறது.

You may also like...