பணப்பையில் 7 ரூபாய் அதிகமாக இருந்தாக குற்றசாட்டி பேருந்து நடத்துநரை பணி நீக்கம் செய்த போக்குவரத்து கழக உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 6 வாரங்களில் மீண்டும் பணியமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. bbj

பணப்பையில் 7 ரூபாய் அதிகமாக இருந்தாக குற்றசாட்டி பேருந்து நடத்துநரை பணி நீக்கம் செய்த போக்குவரத்து கழக உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 6 வாரங்களில் மீண்டும் பணியமர்த்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில், நடத்துநராக பணியாற்றிய அய்யனார் என்பவர் பெண் பயணி ஒருவரிடம், பயணசீட்டிற்கான கட்டணமாக 5 ரூபாய் பெற்றுகொண்டு டிக்கெட் வழங்கவில்லை என்றும், அவரது பணப்பையில் 7ரூபாய் அதிகமாக இருந்ததாக கூறி போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி, 2015 டிசம்பர் மாதம், பணி நீக்கம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது

இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி அய்யானார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பிபி. பாலாஜி, மனுதாரருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை அல்ல என்றும், 7 ரூபாய் அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்பது போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுவதாக கருதுவது கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை இதற்காக அதிகபட்ச தண்டனையாக பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்கமுடியாது எனக்கூறி, அதனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 6 வாரங்களில் அய்யானருக்கு வருகை பதிவு மற்றும் பண பலன்களுடன் மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

You may also like...