தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தேர்தல் முடிவு செல்லும். உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க தேர்தல் முடிவு செல்லும்.
உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தி கடந்த 02/11/2021 அன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இது இந்திய ஜிம்னாஸ்ட்டிக்ஸ் சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அந்த தேர்தல் முடிவை எதிர்த்து தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க முன்னாள் தலைவர் திரு.பிரபு மற்றும் சிலர் வழக்கு தொடர்ந்தனர், அதில் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க நிர்வாகிகள் செயல்பட தடை கோரியும், பொதுக் குழு கூட்ட தடை கோரியும் மற்றும் தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத்தை நிர்வாகிக்க அலுவலர் நியமனம் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. வாழ்க்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. C.V. கார்த்திகேயன் அவர்கள் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதுபோன்ற தேவையற்ற மனுக்களால் விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப் படுவாதகவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் தலைவர் திரு.ரோகபரணி அவர்கள் ஒரு முன்னாள் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் மற்றும் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர் என்பதாலும்தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் இனிமேல் சிறப்பாக செயல்பட்டு தமிழக வீரர்கள் தேசிய அளவில் பங்கேற்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You may also like...