தொழில் நடத்தை விதிகளை மீறிய பெண் வழக்கறிஞர் சுருதி திலக் நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தர தடை விதித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மேலும் 2 வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொழில் நடத்தை விதிகளை மீறிய பெண் வழக்கறிஞர் சுருதி திலக் நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தர தடை விதித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மேலும் 2 வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் மீதான புகார்களை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கும்.

பல்வேறு புகாரின் கீழ் வழக்கறிஞர்கள் மீதான புகார்களை விசாரித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுருதி திலக் வாழ்நாள் முழுவதும் வழக்கறிஞராக நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆஜாரக நிரந்தர தடை விதித்து உத்தரவிடபட்டுள்ளது. இவர் வழக்கறிஞர் தொழில் நடத்தையை மீறி செயல்பட்டது உறுதி செய்யபட்டது நிரூபணம் ஆகியுள்ளது எனவே தடை விதிப்பதாக உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது. சுருதி திலக் முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் முன்னாள் மருமகள் ஆவர்.

கடன் பெற்று மோசடி செய்த புகாரில் சென்னையைச் சேர்ந்த வாசுதேவன் என்ற வழக்கறிஞர் ஐந்து ஆண்டுகள் தொழில் செய்ய தடை விதிப்பதாகவும் இவர் பெற்ற தொகை 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்த வேண்டுமெனவும் ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.உதயன் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதால் அவர் 6 மாதங்கள் நீதிமன்றம், தீர்ப்பாயங்களில் ஆஜராக தடை விதித்த பார் கவுன்சில் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

இதே போன்று சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வினோத் குமார், புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் லெனின், திருவண்ணாமலை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் இவர்கள் மூன்று பேர்க்கு எதிராக நடைபெற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் குழு விசாரணைக்கு பிறகு இவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும் தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

You may also like...