நீட் தேர்வில் முறைகேடு நடத்துள்ளதாக தொடரப்பட்டவழக்கில் வழக்கு தொடர்ந்த மாணவியின் அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பாக பதிலளிக்கும்படி தேசிய தேர்வுமுகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Judge anath venkadesh

நீட் தேர்வில் முறைகேடு நடத்துள்ளதாக தொடரப்பட்டவழக்கில் வழக்கு தொடர்ந்த மாணவியின் அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பாக பதிலளிக்கும்படி தேசிய தேர்வுமுகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச்சேர்ந்த மாணவி ஸ்ரேயா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,மருத்துவபடிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் வெற்றிபெற உரிய பயிற்சி எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.தேசிய தேர்வை முகமை நடத்திய நீட் மாதிரி தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 668 மதிப்பெண்கள் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் 13 ம்தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று திருப்திகரமான முறையில் தேர்வு எழுதியுள்ளதாக குறிப்பிட்டு மாணவி ஸ்ரேயா,தேர்வு முடிந்த பின்பு வெளியிடப்பட்ட சரியான பதில்களை சரிபார்த்ததில் 720 மதிப்பெண்களுக்கு 637 மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும்,.நீட் தேர்வில் 90 கேள்விகளில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்…ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 720 மதிப்பெண்களுக்கு 252 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள மாணவி, தேர்வு முடிவுக்கு பின்பு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் 11 கேள்விகளுக்கு பதில் அளிக்காதது போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.இணையத்தில் விடைத்தாள்கள் வெளியிட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் எனவே மருத்துவபடிப்பு மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடைவிதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் தன்னுடைய அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் வழக்கு தொடர்ந்துள்ள மாணவியின் அசல் விடைத்தாளை சமர்பிப்பது குறித்து தேசிய தேர்வு முகமை மற்றும் சிபிஎஸ்இ வரும் செவ்வாய்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

You may also like...