நீதிபதி டீக்காராமன், வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்த நபர்களுக்கு மட்டும் அழைப்பு கடிதம் அனுப்பி, நியமனம் செய்வதை உறுதி செய்ய மனுதாரர் தவறிவிட்டதால், பணி நீக்க உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை

வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரைக்காத 15 பேரை நியமித்ததாக, அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல உதவி மேலாளரின் பணி நீக்கத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி மேலாளராக பணியாற்றியவர் தட்சிணாமூர்த்தி. இவர் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய 2007ம் ஆண்டு, ஓட்டுனர், நடத்துனர் நியமனம் நடைபெற்றது.

அப்போது, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைக்காத 19 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டதும், அதில் 15 பேர் ஓட்டுனர், நடத்துனர்களாக நியமிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுசம்பந்தமான துறைரீதியான விசாரணைக்கு பின், தட்சிணாமூர்த்தி, பணி ஓய்வு பெற ஆறு மாதங்கள் இருந்த நிலையில், 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்த நபர்களுக்கு மட்டும் அழைப்பு கடிதம் அனுப்பி, நியமனம் செய்வதை உறுதி செய்ய மனுதாரர் தவறிவிட்டதால், பணி நீக்க உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...