போலியாக கோர்ட் உத்தரவு தயாரிப்பு மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம்  ஆஜராகி பரபரபரபு வாதம். நீதிபதிகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு சரமாரி கேள்வி போலீசுக்கு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம், அவரது மனைவி தங்கமணி ஆகியோர் ஒரு வீட்டை காலி செய்வது தொடர்பான வழக்கில் மேல்விசாரணை நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம்  ஆஜராகி, மனுதாரர்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் தெரியாது. ஆனால் அவர்களையும் இந்த வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர், என்றார்.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம் என்பவர் அமல்ராஜ் என்பவரது யோசனைப்படி போலியான நீதிமன்ற தடையாணையை தயாரித்து முருகானந்தத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமல்ராஜ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு ஏற்கெனவே தள்ளுபடியாகி விட்டது. அமல்ராஜ் இதுபோல பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டும் அவரை போலீஸார் இதுநாள் வரை கைது செய்யவில்லை. இந்த வழக்கிலும் அமல்ராஜை போலீஸார் சேர்க்காமல் விட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது. அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும். மேலும் பலரிடம் விசாரிக்கவே இல்லை. போலீஸார் யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வழக்கில் செயல்பட்டுள்ளனர். விசாரணை அதிகாரி இந்த குற்றத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார். உயர் நீதிமன்ற பதிவாளர் கையெழுத்துடன் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் தயாரிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு போலியானது என்பது தெரியாது என போலீஸார் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதில் வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகளின் உடந்தையுடன் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.  இதுபோன்ற விசாரணை அதிகாரிகள் காவல்துறையில் பதவி வகிப்பது சமூகத்துக்கு நல்லதல்ல. எனவே உயர் நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்த கும்பலையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களையும் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த எஸ்பி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை தமிழக டிஜிபி அமைக்க வேண்டும். இந்தக்குழு ஒரு மாதத்துக்குள் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கி்ல் போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் அசல் வழக்கு ஆவணங்களை டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கை வரும் அக்.10-க்கு தள்ளி வைக்கிறோம். அன்றைய தினம் முருகானந்தம், தங்கமணி, சண்முகம் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...