மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக 50 ஆயிரம் ருபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுனின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Judge manjula

மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக 50 ஆயிரம் ருபாயை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுனின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீராமிதுன் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டபோது, அதற்கான அரங்கில் தனியார் நிறுவனம் ஒன்றை பிரபலப்படுத்துவதாக கூறி, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா பட்டங்களை வென்ற தன்னிடம் தேனாம்பேட்டையை சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி என்பவர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சி ரத்தானதால் பணத்தை திருப்பி தரவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகாரில் தன் மீது 2019 ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர் என் மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவ்ல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதாலும். மேலும் தற்போது தலைமறைவாகி உள்ள அவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை என்பதால், எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...