முன்னாள் டிஜிபி-யுமான நட்ராஜ் மீது காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது judge jayachandren .

முதல்வர் ஸ்டாலின் குறித்து வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறு பரப்பியதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வும், முன்னாள் டிஜிபி-யுமான நட்ராஜ் மீது காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கோயில்களை இடித்த தமிழக அரசு பற்றியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும், முன்னாள் டிஜிபி-யும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான ஆர்.நட்ராஜ் வாட்ஸ் அப் குழுக்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நட்ராஜ் தரப்பில் அதே வாட்ஸ் அப் குழுக்களில் தன்னை பற்றியும் அவதூறாக பேசுவதாகவும், தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும், ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, ஒரு புகார் தொடர்பாக விசாரிக்கும்போது மற்றொரு குற்றம் நிகழ்ந்தால், புகார் கொடுக்கும் வரை காவல்துறை நடவடிக்கை எடுக்காதா என கேள்வி எழுப்பினார்.

நடராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நட்ராஜ் மீதான வழக்கின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...