மூன்று வழக்கறிஞர்கள் தொழில்புரிய இரண்டாண்டுகள் தடை விதித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் ஒருவரின் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மூன்று வழக்கறிஞர்கள் தொழில்புரிய இரண்டாண்டுகள் தடை விதித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் ஒருவரின் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் மற்றும் வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய பார் கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் எடுத்த முடிவுகள் குறித்து பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜாகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் சென்னையை சேர்ந்த பொன் பாண்டியன், பிரதாப், திருச்சி சேர்ந்த சுரேஷ்பாபு ஆகியோர் வழக்கறிஞர்களாக தொழில் புரிய இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சார்ந்த பாலாஜி ஆறு மாதங்களுக்கு தொழில் புரிய தடை விதித்தும், திருப்பூரை சேர்ந்த ரகுமான்கானின் பதிவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த விஜயசாரதியின் செயலை கண்டித்தும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

திருநெல்வேலியை சேர்ந்த புலித்துரை மற்றும் கரூர் சேர்ந்த பாலசுப்பிரமணி ஆகியோர் வழக்கறிஞர் தொழில் புரிய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை திரும்ப பெறுவதாகும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like...