மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து இன்று காலையில் காரிலே கல்கத்தாவுக்கு பயணத்தை மேற்கொண்டார்

மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து இன்று காலையில் காரிலே கல்கத்தாவுக்கு பயணத்தை மேற்கொண்டார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் குரல் எழுப்பி வந்த நிலையில், குடியசுத் தலைவர் கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெறவுள்ள அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

‘சார்டர்ட் ஹைகோர்ட்’ என்ற பெருமை கொண்ட பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75.
அப்படிப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து 3 நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்சிப் பானர்ஜி மாற்ற பரிந்துரைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியை வெளிப்பபடுத்தினர்

இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

அதே போல இந்தியாவின் பழமைவாய்ந்த வழக்கறிஞர் சங்கங்களுள் ஒன்றான மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு சஞ்சீப் பானர்ஜியின்
இடமாற்ற உத்தரவை மறு பரீசிலனை செய்யக் கோரி கடிதம் எழுதியதோடு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதன் தொடர்ச்சியாக சஞ்சிப் பானர்ஜியின் இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் விசாரித்த வழக்குகளில் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக மாணவர்களிடம் கருத்து கேட்பதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி
ஏ கே ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது இதை எதிர்த்து பாஜக மாநில நிர்வாகி
கரு .நாகராஜன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

மேலும் கொரானா காலத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்சிஜன்கள் வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் போன்ற பல்வேறு வழக்குகளை விசாரித்து பல உத்தரவை பிறப்பித்திருந்தார்

கடந்த சில தினங்களாக சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றம் பேசுபொருளாக இருந்த நிலையில், தற்போது சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார்

இந்நிலையில் பிரிவு உபச்சார விழாவில் தவிர்த்துவிட்டு கல்கத்தாவிற்கு இன்று காலையில் காரில் பயனத்தை மேற்கொண்டார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்

You may also like...