லியோ திரைப்பட தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு*

[10/17, 12:39] sekarreporter1: [10/17, 12:38] sekarreporter1: https://youtu.be/xtDP6pc-od4?si=QFYzCfvuQH1c5uu8
[10/17, 12:38] sekarreporter1: லியோ வழக்கு ஐகோர்ட் உத்தரவு bar council vice chairman வக்கீல் வேலு கார்த்திகேயன் பேட்டி
[10/17, 13:09] sekarreporter1: *லியோ திரைப்பட தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு*

வருகிற 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது இந்த ஐந்து காட்சிகள் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருக்கிறது.காலை 9 மணி தொடங்கி 1:30 மணிக்கு முடிவடைவதாக அரசு சுற்றறிக்கையில் இடம்பெற்றது.படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடம்.
இடைவேளை மற்றும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவது அனைத்தையும் சேர்த்து தோராயமாக 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும்.ஒதுக்கப்பட்ட நேரம் என்பது 16 மணி நேரம் 30 நிமிடங்கள்.

ஐந்து காட்சிகள் 7 மணிக்கு தொடங்கப்பட்டால் 18 மணி நேரம் 50 நிமிடங்கள் வருகிறது என்பதை எங்கள் தரப்பு வாதம்.ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இடைவெளி நேரத்தை குறைத்து இருப்பதாக எங்கள் தரப்பில் வாதம்.காலை 7 மணிக்கு தொடங்கினால் சரியாக இருக்கும்.இன்று 1:30 மணிக்கு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற பிறகு அரசு உள்துறை செயலாளரை சந்தித்து மனு அளிக்கப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.

மற்ற மாநிலங்களில் 4 மணி காட்சிகள் திரையிடப்பட உள்ளதால் அது குறித்தும் தாக்கல் செய்ய இருக்கிறோம்.திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தையும் இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்ததால் ,அவர்களும் மனுதாரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டறிந்து நான்கு மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள்.அகில இந்திய அளவில் வெளியாக இருப்பதால் மற்ற மாநிலங்களில் காலை 4 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் முன்னதாக படக்காட்சிகள் வெளியாக வாய்ப்புள்ளது

6 காட்சிகள் கேட்டோம். 19ஆம் தேதி அன்று ரசிகர் காட்சி வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினோம்.அது குறித்து பரீசிலிக்க மனு அளியுங்கள் எனக் கூறியிருக்கிறார்கள் அதையும் கொடுக்க இருக்கிறோம்.ஐந்து காட்சிகள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதற்கான நேரத்தையும் ஒதுக்கீடு தர வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்

18 மணி நேரம் 45 நிமிடங்கள் வேண்டும் என்பதை நீதிமன்றம் ஏற்றது.அரசு தரப்பில் பரிசீலனை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.அகில உலக அளவில் விரும்பக் கூடிய நடிகராக விஜய் இருக்கிறார்.4 மணி ரசிகர் சிறப்பு காட்சிக்கு மனு அளியுங்கள் என தெரிவித்திருக்கிறார்கள்.

You may also like...