[10/31, 18:48] sekarreporter1: பிளாஸ்டிக் தடை செய்யும் முன்பு ஆய்வு நடத்தவில்லை வக்கீல் நர்மதா வாதம் [10/31, 18:48] sekarreporter1: ்

பட்டாசுகளை பொதிய செல்லோபன் காகிதம் ( cellophane paper) பயன்படுத்தப்படுவதாகவும், இது மக்கும் தன்மை கொண்டது என பட்டாசு ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு, 2020 ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு விதித்த தடையை உறுதி செய்து உத்தரவிட்டு, சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசாரணையில் உள்ளது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீபாவளி நெருங்கிவரும் நிலையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உறைகளால் பட்டாசுகளை பேக்கிங் செய்யாமல் இருக்க தமிழக அரசு ஏதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பட்டாசுகளை பொதிய பிளாஸ்டிக-கை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி, சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு விருதுநகர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பட்டாசு ஆலைகள் சங்கம் தரப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், பட்டாசுகளை பொதிய செல்லோபன் காகிதம் ( cellophane paper) பயன்படுத்தப்படுவதாகவும், இது மக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளாஸ்டிக் தடை உத்தரவு பிறப்பிக்கும் முன் நிபுணர் குழு ஏதும் அமைக்கப்பட்டதா? அந்த குழுவின் விபரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

You may also like...