[6/21, 17:29] Mba Secretry Baskar: 213 வயதாகும் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற கட்டிடம் இன்றுடன் ஓய்வு பெறுகிறது!!!

[6/21, 17:29] Mba Secretry Baskar: 213 வயதாகும் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற கட்டிடம் இன்றுடன் ஓய்வு பெறுகிறது!!!

பல்வேறு காலகட்டங்களில் பல இன மன்னர்கள் ஆண்டு நீதி தவறா அரசாட்சி புரிந்த தஞ்சையில் தற்பொழுது இயங்கும் நீதி மன்றம் தோன்றிய வரலாற்றை பார்போம்

தஞ்சையில் ஜில்லா நீதி மன்றம் 1806 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, 1807 ஆம் ஆண்டு திரு . சார்லஸ் உட் கோக் (Mr.Charles wood cock) என்பவர் ஜில்லா நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரே தஞ்சை ஜில்லா நீதிமன்றத்தின் முதல் ஜில்லா நீதியரசர் ஆவார். நீதி துறை பணிகள் அதிகமாகவே தஞ்சாவூர் ஜில்லா நீதி மன்றம் , தஞ்சாவூர் மேற்கு மற்றும் கிழக்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் ஜில்லா கிழக்கு நீதி மன்றம் தரங்கம்பாடியின் அமைந்தது. தஞ்சையில் இருந்த ஜில்லா நீதி மன்றம் தஞ்சாவூர் மேற்கு ஜில்லா நீதி மன்றம் என்று ஆனது.

தற்போது உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டிடம் 1870 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.1873 ஆம் ஆண்டு ஜில்லா நீதிமன்றம் மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2007 ஆம் ஆண்டு 200 ஆம் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட நீதி மன்றத்தின் கீழ் 31 கிளை நீதிமன்றங்களும், 596 பணியாளர்களும் உள்ளார்கள். தற்பொழுது வி சிவகாமி என்பவர் மாவட்ட நீதியரசராக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார், இவர் தஞ்சாவூர் மாவட்ட நீதி மன்றத்தின் 148 ஆவது நீதியரசர் ஆவார்.வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை நீதிமன்றத்துக்கு தற்பொழுது 213வயது ஆகிறது. இன்றுடன் தனது பணியை முடித்து கொள்கிறது. இன்று முதல் தஞ்சை மாவட்ட நீதி மன்றம் மணிமண்டபம் அருகே உள்ள புதிய கட்டிடத்தில் இயங்க உள்ளது..
[6/21, 17:31] Sekarreporter 1: 🍁

You may also like...