cma case நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவரத்தி ஆகியோர் விசாரித்து, கீழ்கோர்ட் வழங்கிய இழப்பீடு குறைவாக உள்ளது. எனவே கணவனை இழந்த மனைவிக்கு சுமார் ஒரு கோடியே 28 லட்சத்து 48 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரியை சேர்ந்த மைதிலியின் கணவர் குமார். எம்.எஸ்சி படித்து முடித்து தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக உள்ளார். இவர் ஒசூர் செல்ல சேலம் பஸ்நிலையத்தில் உள்ள பஸ்சில் ஏற சென்றார். அப்போது அரசு பஸ் அவர் மீது மோதியது. அருகே இருந்த பஸ்சும் அவர் மீது மோதியது. இதில் குமார் உடல் நசுங்கி பலியானர். இதனால் இதற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு குமார் மனைவி மைதில் தர்மபுரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கணவனை இழந்த மனைவிக்கும் அவரது குழந்தைக்கும் சுமார் 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவரத்தி ஆகியோர் விசாரித்து, கீழ்கோர்ட் வழங்கிய இழப்பீடு குறைவாக உள்ளது. எனவே கணவனை இழந்த மனைவிக்கு சுமார் ஒரு கோடியே 28 லட்சத்து 48 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like...