Cvkj நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

47வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவது தொடர்பான டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023-ம் ஆண்டுக்கான 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த அக்டோபர் 31ம் தேதி சுற்றுலாத்துறை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த பன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமி்ட்டெட் நிறுவனம் சார்பில் சூரியநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், டெண்டர் கோரி தங்களது நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், டெண்டர் திறக்கப்பட்ட போது, தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றி விட்டு டெண்டரை இறுதி செய்துள்ளதால், டெண்டருக்கு தடை விதி்க்க வேண்டும் எனவும், தங்கள் டெண்டர் படிவத்தையும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், எனவும் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப் பணிகளையும் இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...