Cvkj order in posco case no ab போக்சோ வழக்குகளில் பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே முக்கியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

போக்சோ வழக்குகளில் பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே முக்கியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

போக்சோ வழக்குகளில் பெற்றோர் மற்றும் உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே முக்கியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் மகள் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், தாய் வீட்டில் உள்ள தனது உடைமைகளை எடுக்கச் சென்றபோது, மாமாவால் பாலியில் சீண்டலுக்கு ஆளானதாக தந்தையிடம் சிறுமி புகார் அளித்துள்ளார்.

இதில் பதிவான போக்சோ வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறுமியின் மாமா இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக மனுதாரர் தரப்பில் கூறினாலும், இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸ் விசாரணை தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

திரை மறைவில் ஒழிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என குறிப்பிட்டு, மு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை, உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனும், அந்த குழந்தையின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டியதும் முக்கியம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட குற்றஞ்சாட்டபட்ட நபர் சமீபத்தில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

You may also like...