https://youtu.be/ONzM0oVeIcQ?si=_sbgIO3Dy2Q67jOQ ஐகோர்ட்டுக்கு 2 கூடுதல் நீதிபதிகள். நீதிபதிகள் எண்ணிக்கை 68ஆக உயர்கிறது. இன்னும்7 இடங்கள் காலியாக உள்ளன

ஐகோர்ட்டுக்கு 2 கூடுதல் நீதிபதிகள்

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல்

நீதிபதிகள் எண்ணிக்கை கை 65 ஆக உயர்வு

சென்னை, அக். 14: வழக்கறிஞர்களாக உள்ள செந்தில் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது, 63 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில் வழக்கறிஞர்கள் செந்தில் குமார், அருள் முருகன் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்தது. இதையடுத்து இருவரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்ய ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, செந்தில் குமார், அருள் முருகன் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.
இருவரும் அடுத்த வாரம் நீதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர்.
இதையடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது. இன்னும் 15 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

You may also like...