Jail film case order defamation case order

[12/9, 12:40] Sekarreporter 1: 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர்  தோனி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்கொரி   முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், தனியார் தொலைகாட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேட்ச் பிக்ஸிங் செய்தது, சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பிருப்பதாக இடைத்தரகர் கிட்டி சாட்சியம் அளித்தது, தோனியை காப்பாற்றும் நோக்கில் கிட்டியின் வாக்குமூலத்தை சிபிசிஐடி மறைத்தற்கு முத்கல் கமிட்டி கண்டித்தது ஆகியவற்றை மறைத்து தோனி வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தோனி என்பவர் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை என்றும், அது சூதாட்டத்தின் அடித்தளமாக மாறிவருவதாகவும், அதுபோலதான் சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவித்திருந்தது.
தோனி மீது தங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை என்றும், கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரவே விவாத நிகழ்ச்சியை நடத்தியதாகவும், ஆனால் ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கவே தோனி வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் தோனி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேசாயி இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்..
 
[12/9, 12:52] Sekarreporter 1: விசாகா கமிட்டிக்கு எதிராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த  வழக்கில், கமிட்டி அறிக்கையை சீலிட்ட கவரில்
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரை தொடர்ந்து   சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி,  கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய  விசாகா குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல வழக்கு பதிவு செய்து விசாரித்த சிபிசிஐடி போலீசார்   விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை

தாக்கல் செய்துள்ளனர்

இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க வேண்டும் என்று கேட்டதில்,ஜஜி அருண் க்கு பதிலாக ஜோஷி நிர்மல்குமார் நியமிக்கப்பட்ட போதும்,சீமா அகர்வால் தொடர்ந்து கமிட்டியில் இருப்பதாகவும், சாட்சிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை கூட கமிட்டி தனக்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். பெண் எஸ்.பி யை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், விசாகா கமிட்டியின் அறிக்கை கூட தனக்கு தரப்படவில்லை எனவும்,  விசாகா கமிட்டியை கலைத்துவிட்டு,

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி மீண்டும் முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்ததபோது,
தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாகா கமிட்டியின்  அறிக்கையை சீலிட்ட கவரில்
தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு  உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி சீலிடப்பட்ட கவரில் நீதிபதி முன்பு சமர்ப்பித்தால் இதையடுத்து வழக்கு விசாரணையை 17 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்..
[12/9, 13:40] Sekarreporter 1: பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை கடலூர் சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி அவரது மனைவி தாக்கல் செய்த கூடுதல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாஜக-வை சேர்ந்த கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில் பதிவான வழக்கில், அக்டோபர் 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கல்யாணராமன் கைது செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டத்தில் அடைத்து அக்டோபர் 23ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவரது மனைவி சாந்தி தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனது கணவரை காரணமில்லாமல் கடலூர் சிறையில் அடைத்திருப்பதாகவும், கண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது கணவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றவும், தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, கல்யாணராமனுக்கு தேவையான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறை மாற்றத்திற்கான அவசியம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, கல்யாணராமனின் மனைவி தாக்கல் செய்த கூடுதல் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[12/9, 17:34] Sekarreporter 1: சட்டவிரோதமாக ஆறு நாட்கள் காவலில் வைத்து, காவல்துறையினர் துன்புறுத்தியதில் பலியானவரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காவல் துறையினர் சட்டவிரோதமாக ஆறு நாட்கள் காவலில் வைத்து சித்ரவதை செய்ததால், தனது மகன் சரவணகுமார் இறந்து விட்டதாகவும், அதற்கு காரணமான திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் உதவி ஆய்வாளர் காஞ்சனா தேவி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி புதிய மீனாட்சி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு தாக்கல் செய்த அறிக்கையில், சரவணகுமார் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அவருக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட இரு காவல்துறை அதிகாரிகளும் தாக்கல் செய்த பதில் மனுவில், போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக புகார் வந்ததால் சரவண குமாரை கைது செய்ததாகவும், சிறையில் அடைக்கும் போது அவருடைய காலில் மட்டும் காயம் இருந்ததாகவும், வேறு எந்த காயங்களும் இல்லை என்றும் மாரடைப்பு காரணமாக அவர் இறந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில், சரவணகுமார் ஆறு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து தாக்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை உத்தரவிட்டுள்ளது.
[12/9, 21:17] Sekarreporter 1: ஜெயில் படம் தியேட்டரில் திரையிட ஐகோர்ட் தடை OTT மற்றும் சாட்டிலைட்ல் கோர்ட் அனுமதி இல்லாமல் வெளியிடக்கூடாது என்று ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார் மனுதார்ர் சார்பாக வக்கீல் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார்
[12/9, 21:17] Sekarreporter 1: Until the above conditions
precedent are satisfied, the movie cannot be released in theatres.
[12/9, 21:17] Sekarreporter 1: the Respondent should
establish an escrow account in a scheduled bank pursuant to an escrow
agreement. By such escrow agreement, a bank should be made the escrow
agent. A copy of such escrow agreement shall be provided to the Applicant
as soon as the such account is established, and before the movie is released.

You may also like...