Judge nirmal kumar j order அதிமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதிமுக நிர்வாகியை தாக்கியதாக தொடரபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.è

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த செப்டமர் 24 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு சென்றபோது அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப்பெற்றதால், இவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது. வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

You may also like...