LETTER TO DGP through E-Mail பெறுநர், உயர்திரு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் தமிழ்நாடு காவல்துறை கடற்கரை சாலை,சென்னை மதிப்பிற்குரிய ஐயா ,அவர்களுக்கு! *பொருள்* : தாம்பரம் வழக்கறிஞர்கள் மீது சோமங்கலம் காவல்நிலையத்தில் பொய் வழக்கு பதிந்து ,கைது செய்திருப்பது குறித்து மனு …. எங்கள் கூட்டமைப்பானது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களை இணைத்துள்ள கூட்டமைப்பாகும் ,எங்கள் கூட்டமைப்பில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் அங்கம் வகிக்கின்றனர்.. தமிழகத்தில் சமீப காலங்களில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்களும் ,வழக்கறிஞர்களை காவல்துறையினர் பாரபட்சமாக பார்ப்பதும்,வழக்கறிஞர்கள் மீது புகார் என்றால் விசாரணையின்றி பொய் வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எங்கள் கூட்டமைப்பு பல்வேறு காலகட்டங்களில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் ,மதிப்பிற்குரிய காவல்துறை இயக்குனரான தங்களையும் மேற்படி தாக்குதல்களில் இருந்து வழக்கறிஞர்களை பாதுகாத்திட வேண்டியும் ,ஒரு சில காவல் நிலையங்களில் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை தடுத்திடுமாறும் கோரிக்கை வைத்து வருகின்றோம் , தற்போது 26-10-2023 அன்று தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோமங்கலம் காவல் நிலையத்தில் ,தாம்பரம் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்களான ஐந்து வழக்கறிஞர்கள் (ரஞ்சித்குமார்,ராமன்,முருகேசன் ,செந்தில்பிரபு,சஞ்சய்)மீது பல மாதங்களுக்கு முன்பே குற்ற எண்.240/2023 u/s 147, 447, 448, 506(1)IPC r/w 3(1) TNPPDL Act வழக்கு பதிந்து ,அந்த வழக்கின் அடிப்படையில் விசாரணையின்றி ,உச்சநீதிமன்றமும் ,உயர்நீதிமன்றமும் குறிப்பிட்டுள்ள குற்றம் நடைமுறையை பின்பற்றாமல் திரு.செந்தில்பிரபு,சஞ்சய் ஆகியவர்களை அதிகாலை நேரத்தில் ரவுடிகளை கைது செய்வது போல் சுற்றி வளைத்து கைது செய்து ,காவல் நிலையத்தில் அவர்களை அடைத்து, போலீஸாரால் மிரட்டப்பட்டு காவலில் அடைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குறியது , சமூகத்தில் மதிப்புமிக்க வழக்கறிஞர்களை ,வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் தெரிவிக்காமல் ,விசாரணை அழைப்பாணை கொடுக்காமலும், முறையாக விசாரிக்காமலும் இவ்வாறு கைது செய்திருப்பது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீதுள்ள நம்பகதன்மையற்ற சூழல் உருவாகிறது,மேற்படி சோமங்கலம் காவல்நிலைய காவலர்களின் செயலை எங்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்து ,உடனடியாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்கவும்,வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்துகிறோம்.. ஆகவே மதிப்பிற்குரிய காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உடனடியாகத்தலையிட்டு வழக்கறிஞர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற அல்லது ரத்து செய்யுமாறும்,கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டள்ள வழக்கறிஞர்கள் திரு.செந்தில்பிரபு,திரு.சஞ்சய் ஆகியோர்களை விடுவிக்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்…. நன்றி! இவண் வழக்கறிஞர் கரூர் நா.மாரப்பன் தலைவர்,கூட்டமைப்பு

LETTER TO DGP through E-Mail

பெறுநர்,
உயர்திரு காவல்துறை தலைமை இயக்குனர்
அவர்கள்
தமிழ்நாடு காவல்துறை
கடற்கரை சாலை,சென்னை

மதிப்பிற்குரிய ஐயா ,அவர்களுக்கு!

*பொருள்* : தாம்பரம் வழக்கறிஞர்கள் மீது சோமங்கலம் காவல்நிலையத்தில் பொய் வழக்கு பதிந்து ,கைது செய்திருப்பது குறித்து மனு ….

எங்கள் கூட்டமைப்பானது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களை இணைத்துள்ள கூட்டமைப்பாகும் ,எங்கள் கூட்டமைப்பில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் அங்கம் வகிக்கின்றனர்..

தமிழகத்தில் சமீப காலங்களில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்களும் ,வழக்கறிஞர்களை காவல்துறையினர் பாரபட்சமாக பார்ப்பதும்,வழக்கறிஞர்கள் மீது புகார் என்றால் விசாரணையின்றி பொய் வழக்கு பதிவு செய்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எங்கள் கூட்டமைப்பு பல்வேறு காலகட்டங்களில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் ,மதிப்பிற்குரிய காவல்துறை இயக்குனரான தங்களையும் மேற்படி தாக்குதல்களில் இருந்து வழக்கறிஞர்களை பாதுகாத்திட வேண்டியும் ,ஒரு சில காவல் நிலையங்களில் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை தடுத்திடுமாறும் கோரிக்கை வைத்து வருகின்றோம் ,

தற்போது 26-10-2023 அன்று தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோமங்கலம் காவல் நிலையத்தில் ,தாம்பரம் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்களான ஐந்து வழக்கறிஞர்கள் (ரஞ்சித்குமார்,ராமன்,முருகேசன் ,செந்தில்பிரபு,சஞ்சய்)மீது பல மாதங்களுக்கு முன்பே குற்ற எண்.240/2023 u/s 147, 447, 448, 506(1)IPC r/w 3(1) TNPPDL Act வழக்கு பதிந்து ,அந்த வழக்கின் அடிப்படையில் விசாரணையின்றி ,உச்சநீதிமன்றமும் ,உயர்நீதிமன்றமும் குறிப்பிட்டுள்ள குற்றம் நடைமுறையை பின்பற்றாமல் திரு.செந்தில்பிரபு,சஞ்சய் ஆகியவர்களை அதிகாலை நேரத்தில் ரவுடிகளை கைது செய்வது போல் சுற்றி வளைத்து கைது செய்து ,காவல் நிலையத்தில் அவர்களை அடைத்து, போலீஸாரால் மிரட்டப்பட்டு காவலில் அடைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குறியது ,
சமூகத்தில் மதிப்புமிக்க வழக்கறிஞர்களை ,வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் தெரிவிக்காமல் ,விசாரணை அழைப்பாணை கொடுக்காமலும், முறையாக விசாரிக்காமலும் இவ்வாறு கைது செய்திருப்பது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீதுள்ள நம்பகதன்மையற்ற சூழல் உருவாகிறது,மேற்படி சோமங்கலம் காவல்நிலைய காவலர்களின் செயலை எங்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்து ,உடனடியாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்கவும்,வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்துகிறோம்..

ஆகவே

  • மதிப்பிற்குரிய காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உடனடியாகத்தலையிட்டு வழக்கறிஞர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற அல்லது ரத்து செய்யுமாறும்,கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டள்ள வழக்கறிஞர்கள் திரு.செந்தில்பிரபு,திரு.சஞ்சய் ஆகியோர்களை விடுவிக்க ஆவணம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்….
    நன்றி!
    இவண்

    வழக்கறிஞர்
    கரூர் நா.மாரப்பன்
    தலைவர்,கூட்டமைப்பு

  • You may also like...