m sundee j thilagavathu j தொழில் தொடங்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொழில் தொடங்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் யுவராஜ் தொழில் தொடங்க பணம் தரும்படி தந்தையிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பணம் வழங்க தந்தை மறுத்திருக்கிறார்.

இதனால் தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த யுவராஜ், கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் இரவில் தந்தையை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று வெட்டி கொலை செய்ததாக எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் கே.ஜி.திலகவதி அடங்கிய அமர்வு, பெரிய மணலி கிராம நிர்வாக அதிகாரியிடம் யுவராஜ் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தானாக முன்வந்து ஒப்புதல் வாக்கு மூலத்தை அளித்தார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் ஒப்புதல் வாக்கு மூலத்தில் சந்தேகங்கள் இருப்பதாகவும் கூறி, யுவராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

You may also like...