madras high court june 10th orders roundup cj bench order smsj order r subramanij bench order locadalath

[6/11, 07:12] sekarreporter1: குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரதான சாலையில் அரசுக்கு சொந்தமான வணிக வளாகம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்து விட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து அங்குப்கடை நடத்தி வந்த அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், கட்டிடம் சேதமடையவில்லை எனவும், முறையாக வாடகை செலுத்தி வருவதால், காலி செய்யக் கூறி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, ஓசூர் சார் ஆட்சியர் தரப்பில், மனுதாரர்கள் இருவரும் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதாகவும், முறையாக வாடகை செலுத்துவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல எனவும், மனுதாரர்கள் இருவரும் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் கடைகளை நடத்தி வருவதால், சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், அரசு வருவாயை பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்த நீதிபதி, குத்தகை சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[6/11, 07:12] sekarreporter1: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது சென்னை நீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளதாக கூறி அதன் நகலை வெளியிட்டுள்ளார் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி.. பழ.நெடுமாறன் கூறிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவர் தோன்றுவார் என்று தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்த நிலையில், பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அவர் இறந்து விட்டதாக கூறி, ராஜிவ் கொலை வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழக மூத்த வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், பழ.நெடுமாறன், தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் உரிய நேரத்தில் தோன்றுவார் என்றும் கூறியிருந்தார். இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் விவாத பொருளாக இருந்தது.

இந்நிலையில், பிரபாகரன் இறந்து விட்டார் என, சென்னை நீதிமன்றத்தில் சிபிஐ-யால் தெரிவிக்கப்பட்டு, அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக கூறி, மூத்த வழக்கறிஞர் துரைசாமி கூறியிருக்கிறார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரன், பொட்டு அம்மன் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை நடத்தி வந்த சிபிஐ, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, சென்னை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது எனத் தெரிவித்தார்.

சிபிஐ தனது மனுவில், இலங்கை துணை தூதரகம் மற்றும் இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களின்படி, பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் இறந்து விட்டதாகவும், அதனால் அவர்களுக்கு எதிரான வழக்கை கைவிட வேண்டும் எனக் கோரியிருந்ததாகவும், அதற்கு ஒப்புதல் அளித்து ஏற்ற நீதிமன்றம், 2010 ஆகஸ்ட் 31ம் தேதி பிரபாகரன் மீதான வழக்கை கைவிட்டு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலையும் அவர் வெளியிட்டார்..
[6/11, 07:12] sekarreporter1: TAMIL NADU STATE LEGAL SERVICES AUTHORITY (TNSLSA)
HIGH COURT CAMPUS, CHENNAI- 600 104
PRESS RELEASE

The Hon’ble Executive Chairman, National Legal Services Authority (NALSA) had directed to hold Lok Adalats on specific subject matters.

As per the guidance of His Lordship Hon’ble Mr. Justice Sanjay Vijaykumar Gangapurwala, the Chief Justice, High Court, Madras/Patron-in-Chief of TNSLSA and as per the directions of His Lordship Hon’ble Mr.Justice S.Vaidyanathan, Judge, High Court, Madras/Executive Chairman of TNSLSA, this Authority has directed all the Legal Services Institutions across the State of Tamil Nadu to hold Lok Adalat on Specific Subject matters (Intellectual Property Rights, Consumer Cases and other matters pending before any other quasi-judicial Authority) today i.e. 10.06.2023 (Saturday).
In District Legal Services Authorities and Taluk Legal Services Committees across the State 149 benches were constituted and cases disposed off as detailed below as at 5.00 P.M.
S.
No. Category Number of cases settled Award Amount
Rs.
1. Pending Cases 2,697 117,14,32,117
2. Pre-Litigation 1,252 14,81,94,057
Total 3,949 131,96,26,174

The High Court Legal Services Committee has constituted 4 benches at the Principal Seat of High Court, Madras consisting of Hon’ble Mr. Justice D.Bharathachakravarthy, Hon’ble Mr. Justice P.B.Balaji, Hon’ble Mrs. Justice R.Kalaimathi and Hon’ble Mrs. Justice K.Govindarajan Thilakavadi, Judges, High Court of Madras and at Madurai Bench of Madras High Court has constituted 3 benches consisting of Hon’ble Mrs. Justice L.Victoria Gowri, Hon’ble Mr. Justice K.K.Ramakrishnan and Hon’ble Mrs. Justice S.Ananthi Retired Judge of High Court, Madras as Presiding Officer of Lok Adalat.

 

Thiru. A. Nazir Ahamed
Member Secretary/District Judge
[6/11, 07:12] sekarreporter1: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு கால நிர்ணயம் செய்து விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், பல்கலைக்கழக மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், பல்கலைக்கழக செயல்பாடுகளில் இடையூறு ஏற்படாமலும் தடுக்க, துணைவேந்தர்கள் நியமன நடைமுறைகளை உடனுக்குடன் முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில்மனுவில், துணைவேந்தர்கள் தேர்வு நடைமுறைகளை எப்போது துவங்குவது, எப்போது முடிப்பது என கால நிர்ணயம் செய்து தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த ஆண்டும், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம், சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[6/11, 07:12] sekarreporter1: ( TNSLSA)
உயர் நீதிமன்ற வளாகம், சென்னை- 600 104
செய்தி வெளியீடு

மாண்புமிகு செயல் தலைவர், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) குறிப்பிட்ட விஷயங்களில் லோக் அதாலத் நடத்த உத்தரவிட்டார்.

 

மாண்புமிகு திரு. நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றம், மெட்ராஸ்/TNSLSA இன் தலைமை புரவலர் மற்றும் அவரது திருவருள் மாண்புமிகு திரு.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி , நீதிபதி, உயர்நீதிமன்றம், மெட்ராஸ்/TNSLSA இன் செயல் தலைவர், இந்த ஆணையம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்ட சேவை நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட விஷயங்களில் (அறிவுசார் சொத்துரிமைகள், நுகர்வோர் வழக்குகள் மற்றும் பிற விஷயங்களில் நிலுவையில் உள்ள விஷயங்கள்) லோக் அதாலத் நடத்த உத்தரவிட்டுள்ளது. அரை நீதித்துறை) இன்று அதாவது 10.06.2023 (சனிக்கிழமை). மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரசபைகள் மற்றும் தாலுகா சட்ட சேவைகள் குழுக்களில் 149 பெஞ்சுகள் அமைக்கப்பட்டு, மாலை 5.00 மணி வரை கீழே விவரிக்கப்பட்டுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. எஸ் . எண் வகை வழக்குகளின் எண்ணிக்கை தீர்வு தொகை

 

ரூ.
1. நிலுவையில் உள்ள வழக்குகள் 2,697 117,14,32,117
2. முன் வழக்கு 1,252 14,81,94,057
மொத்தம் 3,949 131,96,26,174

 

உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் குழு, சென்னை உயர் நீதிமன்ற முதன்மை இருக்கையில் மாண்புமிகு திரு. நீதிபதி டி.பாரதச்சக்கரவர்த்தி, மாண்புமிகு திரு. நீதிபதி பி.பி.பாலாஜி, மாண்புமிகு திருமதி. நீதிபதி ஆர்.கலைமதி மற்றும் மாண்புமிகு நீதிபதிகள் அடங்கிய 4 பெஞ்ச்களை அமைத்துள்ளது. ‘ble நீதிபதி திருமதி கே.கோவிந்தராஜன் திலகவதி, நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் மாண்புமிகு திருமதி. நீதிபதி எல்.விக்டோரியா கௌரி, மாண்புமிகு திரு. நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் மற்றும் மாண்புமிகு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 3 பெஞ்ச்கள் அமைக்கப்பட்டன. ‘ble திருமதி. நீதிபதி எஸ்.ஆனந்தி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, சென்னை, லோக் அதாலத்தின் தலைமை அதிகாரி.

 

திரு. A. Nazir Ahamed
உறுப்பினர் செயலாளர்/மாவட்ட நீதிபதி
[6/11, 07:12] sekarreporter1: தமிழகம் முழுவதும் அறிவுசார் சொத்துரிமை, நுகர்வோர் வழக்குகள் தொடர்பாக இன்று நடத்தப்பட்ட சிறப்பு லோக் அதாலத்தில் 132 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 949 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா ஆலோசனையின்படி, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு, அறிவுசார் சொத்துரிமை, நுகர்வோர் வழக்குகள் உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத் தமிழகம் முழுவதும் இன்று நடத்தியது.

மாவட்ட மற்றும் தாலுகா அளவில் 149 அமர்வுகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 அமர்வுகளும், மதுரைக் கிளையில் மூன்று அமர்வுகளும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டன.

இதில், 131 கோடியே 96 லட்சத்து 26 ஆயிரத்து 174 ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 949 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நசீர் அஹமது தெரிவித்துள்ளார்

[6/10, 21:56] sekarreporter1: *தமிழ் நாடு பொது சொத்துக்கள் சேததடுப்பு சட்டம் அரசியல், மத ரீதியிலான ஊர்வலம் போன்றவை மட்டுமின்றி தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போது தனியார் அல்லது பொது சொத்துக்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது*

இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதலில் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் போது, தமிழ்நாடு சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கும்போது உயர்நீதிமன்றத்தில்,
பல்வேறு வழக்கில் ஒவ்வொரு நீதிபதியும் முரண்பாடான உத்தரவுகளை வழங்கியிருந்தனர். ஒரு சில நீதிபதிகள் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் சில நீதிபதிகள் அரசியல் கட்சிகள், ஜாதிமத அமைப்புகள் போன்ற பொது அமைப்புகள் நடத்துகின்ற கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் போன்றவைகளின் ஏற்படுகிற சேதத்திற்க்கு மட்டுமே இந்தசட்டம் பொருந்தும் என தீர்ப்பளித்திருந்தனர்.

முரண்பாடான இருவேறுப்பட்ட தீர்ப்புகள் உள்ளதால் இதனை தீர்வு காணும்பொருட்டு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் எல்.விக்டோரியா கவுரி அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி இந்த சட்டம் அரசியல் கட்சிகள் உள்ளிட்டவைகளின் போராட்டம், பேரணி, பொதுகூட்ட சமயங்களில் ஏற்படுகின்ற சேதத்திற்கு மட்டுமின்றி தனிப்பட்ட இரு தரப்பினர், அல்லது தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளின் போது பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என்று பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடினார்.

நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் அரசியல் கட்சிகள் அல்லது வகுப்புவாத, மொழி அல்லது இன குழுக்களால் நடைபெறும் ஊர்வலங்கள், போராட்டங்கள், அல்லது பிற செயல்பாடுகளின் போது, பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பை ஏற்பாட்டாளர்கள் மீது நிர்ணயிக்கும் நோக்கத்தை அடைய இந்த சட்டம் வரையறுத்து உள்ளது. ஆனால்.அதே சமயம் இந்த சட்டம் தனியார் சொத்துக்களுக்கும் பொருந்தும் வகையிலும், தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்தையும் குற்றமாக்குவதே சட்டத்தின் நோக்கம் என்பது தெளிவாகிறது.

தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதே சட்டமியற்றுபவர்கள் நோக்கம். எனவே அரசியல் கட்சிகள் உள்ளிட்டவைகளின் போராட்டம், பேரணி, பொதுகூட்ட சமயங்களில் ஏற்படுகின்ற சேதத்திற்கு மட்டுமின்றி, பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு தனி நபர்களால் ஏற்படுகிற சேதத்திற்கும் தமிழ்நாடு பொது சொத்து சேதம் சட்டத்தின்படி விசாரணை செய்யலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
[6/10, 22:36] sekarreporter1: THE HONOURABLE MR.JUSTICE R.SUBRAMANIAN AND THE HONOURABLE MRS.JUSTICE L. VICTORIA GOWRI Criminal RC (MD) No.869 of 2022 https://sekarreporter.com/the-honourable-mr-justice-r-subramanian-and-the-honourable-mrs-justice-l-victoria-gowri-criminal-rc-md-no-869-of-2022/

 

 

.

You may also like...