Madras high court sep 10 th orders news click the link and read

[9/9, 11:19] Sekarreporter1: தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்…

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

கட்டணம் உத்தரவை மறு ஆய்வு செய்யும் நடைமுறை முடியும் வரை தற்போதைய கட்டண நடைமுறையை தொடர அனுமதி…

50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணத்தை வசூலிப்பதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களில் தகுதியான மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் சேர்க்கை பெற முடியாது – உயர் நீதிமன்றம்…

தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்தது தலைமை நீதிபதி அமர்வு…
[9/9, 11:24] Sekarreporter1: Judges say the expert committee which recommended collection of less fees for 50% of seats had failed to consider what would happen if many of the rest of 50% go vacant due to inability to pay high fees.
[9/9, 11:24] Sekarreporter1: NMC MEDICAL COLLEGE FEES CASE: Madras High Court directs NMC to reconsider its office memorandum that 50% of seats in private colleges & deemed universities must be filled by collecting only the fees charged by Govt colleges in their respective State
[9/9, 11:24] Sekarreporter1: Therefore, court has directed NMC to take a relook at the memorandum at the earliest. Till then, present fee structure will continue.
[9/9, 11:29] Sekarreporter1: தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், மருத்துவ படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு விசாரித்தது.

நிகர் நிலை பல்கலைகழகங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகள் தரப்பில், அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்கள் வசூலிக்க வேண்டும் என்று எப்படி நிர்ப்பந்திக்க முடியும் என கேள்வி எழுப்பின.

ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிடப்பட்டது.

50சதவீதம் மாணவர்களிடம் 50சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் விரும்பினால், தனியார் கல்லூரிகளுக்கு மானியம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், தனியார் மருத்துவ கல்லூரிகள் லாபநோக்குடன் செயல்படக் கூடாது என்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தனியார் கல்லூரிகளை முறைப்படுத்த நீதிமன்றங்களும் தொடர்ச்சியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

நிபுணர் குழுவை நியமித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே, 50சதவீத மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்தனர்.

தனியார் மருத்துவ கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 50 சதவீத இடங்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

அதேசமயம், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படுவதால், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், தகுதி வாய்ந்த மாணவர்களால் சேர்க்கை பெற முடியாது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

50 சதவீத மாணவர்களுக்கு அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யும் வரை தற்போதைய நடைமுறையை பின்பற்றலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
[9/9, 12:02] Sekarreporter1: நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் – ஐகோர்ட்

விஷால் ஆஜராகாத நிலையில், பிரமணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட அவரது கோரிக்கையை ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்

பைனான்சியர் அன்புசெழியனின் கடனை அடைக்க விஷால் வாங்கிய ரூ. 21.29 கோடி கடனை செலுத்தாமல் படத்தை வெளியிடுவதாக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு

லைகா நிறுவனம் மேல்முறையீடு; ஒரே நாளில் ரூ. 18 கோடி நஷ்டம்; 6 மாதம் ஆனாலும் செலுத்த முடியாது என கடந்த முறை விஷால் நேரில் ஆஜராகி விளக்கம்

வழக்கு விசாரணை செப்டம்பர் 23 தள்ளிவைப்பு
[9/9, 12:03] Sekarreporter1: லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விசாலுக்கு மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் விஷால் ஆஜராகி லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை என்றும், தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை அடைக்கவே படங்களில் நடித்துவருவதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும், மீண்டும் ஆஜராகவும் உத்தவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, நடிகர் விஷால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[9/9, 15:27] Sekarreporter1: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு….

சென்னை உயர் நீதிமன்றம்

வேலுமணி தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் – தமிழக அரசு

உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளதால் உயர் நீதிமன்றம் தற்போது விசாரிப்பது சரியாக இருக்காது – அரசு

அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்குகளை தள்ளிவைத்தது தலைமை நீதிபதி அமர்வு

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி
வேலுமணி தொடர்ந்த வழக்குகள் செப்டம்பர் 19ஆம் தேதி தள்ளிவைப்பு
[9/9, 16:19] Sekarreporter1: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் எனவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராக கூடாது எனவும் தமிழக அரசுத்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆட்சேபங்களை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்ததுடன், வேலுமணி மனு மீதான இடைக்கால உத்தரவுக்காக விசாரணையை இன்று தள்ளி வைத்திருந்தது.

இதற்கிடையில் ஆட்சேபங்களை நிராகரித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று, வேலுமணி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு மீது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் மனுவை விசாரிக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு வலியுறுத்தினார்.

ஆனால் தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் தள்ளிவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்குகளின் விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
[9/9, 17:42] Sekarreporter1: நாட்டா தகுதித் தேர்வு தேவையில்லை என ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவித்த பிறகும், அந்த தகுதி அவசியம் எனக் கூறி , பி.ஆர்க். படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி. ஆர்க். படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என ஆர்கிடெக்சர் கவுன்சில் 2008ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இருப்பினும் பல மாநிலங்களில் நாட்டா தகுதித் தேர்வில் தேர்ச்சியை வற்புறுத்தியதால், ஆர்கிடெக்சர் கவுன்சில் 2017ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி வெளியிட்ட விளக்க சுற்றறிக்கையில், நாட்டாவை வற்புறுத்த தேவையில்லை என்றும், ஜே.இ.இ. உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் பி.ஆர்க். படிப்பில் சேர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 2017-18ம் கல்வியாண்டில் பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான விளக்க குறிப்புகளில் நாட்டா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஜே.இ.இ. தேர்வில் 390 மதிப்பெண்களுக்கு 226 எடுத்த அம்ருதா என்கிற மாணவி பி.ஆர்க். படிப்பிற்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாட்டா தேர்வு கட்டாயமில்லை என்ற பிறகும், விண்ணப்பத்தை நிராகரித்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க 2017ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது .

கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்ரமணியன், நாட்டா தேவையில்லை என்று 2017ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், நாட்டா தகுதி தேர்வு அவசியம் என ஜூன் 25ம் தேதி மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டது ஆர்கிடெக்சர் கவுன்சில் உத்தரவை மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் கூட, நாட்டா கட்டாயம் என்ற அறிவிப்புக்கு 2008ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், ஜே.இ.இ. உள்ளிட்ட தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் நாட்டா தேர்வில் தகுதி பெறவில்லை என கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 10 லட்ச ரூபாய் இழப்பீடும், ஒரு லட்ச ரூபாய் வழக்கு செலவு தொகையாகவும் சேர்த்து 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பில் இருக்கும் பொறுப்பற்ற கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளால், நம் இளைஞர்களின் வாழ்வு எப்படி பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதை இந்த வழக்கு படம்பிடித்து காட்டுவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்வி என்பது வாழ்வாதாரத்திற்கு தேவையான தகுதியை வழங்குவதற்கு மட்டும் அல்ல; சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதும் தான் என குறிப்பிட்ட நீதிபதி, சமீப நாட்களில் கல்வி வணிகமயமானது மட்டும் அல்லாமல், தகுதி இல்லாதவர்களின் கைகளிலும், அறிவுசார் ஆணவகாரர்களின் கைகளிலும் விழுந்துவிட்டதாக வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

பெயருக்கு பின்னால் கல்வி தகுதியை பெற்றிருக்கும் இந்த ஆணவக்காரர்கள் எடுக்கும் முடிவுகளால், மாணவர்களின் வாழ்க்கை வீணாவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
[9/9, 17:54] Sekarreporter1: ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒலி முகமது பேட்டை பகுதியில் கஞ்சா விற்பது தொடர்பாக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினர் 2020-ம் ஆண்டு சோதனை நடத்தியபோது, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த பவன்குமார், பானு பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

2 சாக்குகளில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான, அந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரணை நடந்தது.

விசாரணைக்கு பிறகு பவன்குமார், பானுபிரகாஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
[9/9, 18:02] Sekarreporter1: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் தேடப்படுபவருக்கு முன்ஜாமீன் மறுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஜூலை 13 தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதனையடுத்து ஜூலை 17 ஆம் தேதி பள்ளிக்குள் புகுந்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர் சிலர் பொருள்களை திருடி சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சின்னச்சேலம் காவல்துறை பலரை கைது செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் கடலூர் மாவட்டம், வேப்பூரைச் சேர்ந்த தேவந்திரன் என்பவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், உள்ளூர் கேபிள் டிவி மற்றும் பத்திரிகை நடத்துகிறேன். இதற்காக செய்தி சேகரிக்க சென்ற என்னையும் காவல்துறையினர் குற்றவாளியாக சேர்ந்து தேடி வருகின்றனர். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மனுதாரர் வாட்ஸ் ஆப் குரூப்பில் பிறரை கலவரத்தில் ஈடுபடும் விதமான குறுஞ்செய்தியை பதிவிட்டுள்ளார். கலவரம் நடந்தபோது. சம்பவ இடத்தில் இருந்துள்ளார் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[9/9, 20:31] Sekarreporter1: [9/9, 13:02] Sekarreporter1: The validity of Sec. 10(1)(I) of the NMC Act, 2019 has been upheld. Court has held that all medical colleges, including those run by deemed universities, will come under NMC fee fixation only.

With respect to the Office Memorandum, the Court has held that directing fees for 50% of seats to be fixed equivalent to govt college fees will result in cross subsidy which is barred by the Supreme Court. The court has further held that the same will also result in seats going vacant due to high fees.

Therefore, the Court has directed the NMC to reconsider and issue a fresh Office Memorandum in light of the judgment. Till then, the court has directed that existing fee fixation practise will continue.
[9/9, 13:02] Sekarreporter1: Mr. Vijaynarayan, PS Raman and ArL Sundaresan appeared for petitioners.
[9/9, 13:02] Sekarreporter1: Learned ASG appeared for respondents.

You may also like...