Madras high court nov 3rd orders click the link read the news

 

[11/3, 08:00] Sekarreporter 1: சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தை திருமணம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 2021ம் ஆண்டு, 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, தீட்சிதர்களுக்கு எதிராக, கடலூர் அனைத்து மகளிர் போலீஸில் மாவட்ட பெண்கள் நல ஊரக அலுவலரான தவமணி என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பல தீட்சிதர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் குழந்தை திருமணம் ஏதும் நடத்தப்படவில்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரி, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களான தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தீட்சிதர் குல வழக்கப்படி நடராஜர் -சிவகாமி அம்மன் சன்னதியில் போலியாக திருமணம் நடத்தப்படும் எனவும், இவ்வாறு பல குடும்பத்தினர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தியுள்ளதாகவும், அவை உண்மையான திருமணம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீட்சிதர்களுக்கும், நடராஜர் கோவிலுக்கும் உள்ள நன்மதிப்பை கெடுக்கும் விதமாக பதியப்பட்டுள்ள இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவுன், மருத்துவப் பரிசோதனை செய்ததால் மனதளவில் பாதிக்கப்பட்ட தனது மகள், பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்து வருவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[11/3, 12:17] Sekarreporter 1: திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் நிதிநிலை நெருக்கடி காரணமாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் துறையை தற்போதைக்கு துவங்க இயலாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக நிதிநிலை சீராகும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் இத்துறையை துவங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனி துறையை அமைக்க 2006 ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இதுவரை எந்த நடவ்டிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி உள்ளதால் தற்போதைக்கு இந்த புதிய துறையை துவங்க இயலாது எனவும், நிதி நிலை சீரானதும் இத்துறையை துவங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், நிதிநிலை சீராகும்பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் அம்பேத்கர் படிப்புகள் துறையை துவங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[11/3, 12:44] Sekarreporter 1: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரிய சிபிசிஐடி வழக்கு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்க
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2021ல் அளிக்கப்பட்ட புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்க கோரி எந்த மனுவையும் சிபிசிஐடி தாக்கல் செய்யாத நிலையில், வழக்கை நடத்த முடியாது என கூறி, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

வழக்கு ரத்து செய்யப்பட்ட உத்தரவை திரும்பபெறக் கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறினார்.

இதனையடுத்து, மனு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
[11/3, 13:08] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த வி செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள உள்ள வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பலர் விண்ணப்பித்ததாகவும் ஆனால் தேர்வு வாரியத்தில் அந்த தேர்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதுவரை பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளனர்.மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 167 கலை அறிவியல் கல்லூரிகள் 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் சுமார் 10,000 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிள்ள மனுதாரர்கள்,கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் 1020 பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர் .பதவியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வேலைப்பளு அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுவதாகவும் மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் பள்ளி கல்வித்துறை சார்ந்தவர்களை உள்ளதாக தெரிவித்துள்ளனர் ..ஒரே ஒரு இணை இயக்குனர் அந்தஸ்தில் உயர் கல்வி துறை சார்பில் உறுப்பினர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக உயர்கல்வித்துறை சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆண்டு கணக்கில் நிரப்பப்படாத காரணத்தினால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ்,அரசு கலைக்கல்லூரிகளில்,உதவி பேராசிரியர்
பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக என்ன நிலை என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 25 ம்தேதி ஒத்தி வைத்துள்ளார்.
[11/3, 13:43] Sekarreporter 1: தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த யுவராஜ் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர்களின் தலைமுடியை வெட்டியும், கால் சட்டை கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மாணவனின் தாய் கலா கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாணவர்களுடைய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியை நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 45 லிருந்து சதவீதத்திலிருந்து 90 ஆக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து மாவட்ட கல்வி தலைமை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் தவறு என அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் ராபர்ட் தரப்பில், தற்கொலை செய்து கொண்ட யுவராஜ் ஒவ்வொரு மாதமும் 50 சதவீத நாட்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வருவார் என்றும், தனக்கு எதிரான புகார் பொய்யான புகார் என்றும், பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மற்றும் காவல்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று நிரூபணமாவதாக கூறி தாய் கலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை குறை கூறுவதை ஏற்க முடியாது என்றும், மாணவர்களை ஒழுங்குபடுத்த கல்வித் துறை வகுத்துள்ள விதிகளை மீறும் பொழுதுதான் அவர்களை தண்டிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவர்களின் நலனும் பாதிக்கப்படுவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை நன்றாக படிக்கச் செய்யவும், ஒழுங்கம் பேணச் செய்யவும் முயற்சிக்கும் ஆசிரியர்களை ஊக்கக் குறைவுபடுத்தினால், அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்ய மாட்டார்கள் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆசிரியர்களை குறைகூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி அல்லது ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்பாக தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்றும், வீட்டிலும், சமூகத்திலும் தங்களது பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது அவர்களின் கடமை என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
[11/3, 13:44] Sekarreporter 1: பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் அவர்களை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை……

சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாணவர்களை நன்றாக படிக்கச் செய்யவும், ஒழுங்கம் பேணச் செய்யவும் முயற்சிக்கும் ஆசிரியர்களை ஊக்கக் குறைவுபடுத்தினால், அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்ய மாட்டார்கள் – நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கையும், ரூ. 10 லட்சம் இழப்பீடும் கோரி கலா என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மாணவர்களின் தலைமுடியை வெட்டியும், கால் சட்டை கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான் மகன் தற்கொலை – மனு

மாணவர்களுடைய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் செயல்பட்டுள்ளார். மாவட்ட தலைமை கல்வி அதிகாரியின் விசாரணையில் குற்றச்சாட்டுகள் தவறு என அறிக்கை – அரசு

ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது – நீதிமன்றம்

பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவர்களின் நலனும் பாதிக்கப்படுகின்றன – நீதிமன்றம்
[11/3, 19:01] Sekarreporter 1: பாஜக பெண் நிர்வாகிகளை இழிவு படுத்திய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க தேசிய பெண்கள் நல ஆணையம் தமிழக டிஜிபி அவர்களுக்கு அறிவுறுத்தல்!

எடுத்த நடவடிக்கை குறித்து ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு!
[11/3, 21:51] Sekarreporter 1: பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்று விசிக சார்பில் தொடரப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

பிரதமராக மோடி பதவியேற்ற எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில் பறையரிலிருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் ( from a pariah to a viswaguru ) என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். பறையர் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்தநிலையில்,
சென்னை காவல்துறை ஆணையரிடம் அண்ணாமலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவால் சாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும்,அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் காசி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த மனுவில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.இந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளார்.மனு மீதான உத்தரவை வரும் 7 ம் தேதி பிறப்பிக்க உள்ளார்.

You may also like...