Madras high court orders december 14

[12/14, 10:42] Sekarreporter 1: வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல

உட்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது

மனு தள்ளுபடி
[12/14, 11:24] Sekarreporter 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல், கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் நடத்தப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு அங்கீகாரம் வழங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

அவர் மனுவில், இத்தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிட வில்லை என்றும் கூறியுள்ளார்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட்டதாக கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உள்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு என்றும், எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை சேர்த்ததால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியில் நடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்பதாலும், ஜனநாயகம் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் எனவும், வாக்குரிமை என்பது அரசியல் சட்ட உரிமை என்றும் தெரிவித்தார். அரசியல் சாசனத்தின் ஜனநாயக உரிமையை மீறி செயல்படும் போது அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என பிசிசி ஐ வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பிரசாத் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முந்தைய நாளான டிசம்பர் 6ஆம் தேதியே போட்டியின்றி இருவரை தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்த வழக்கில் இன்று இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், உள்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[12/14, 11:45] Sekarreporter 1: தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயப்படுத்துவதை தடுக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அதை தடுப்பதற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் தொடர்ந்த 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். தந்தை மறைவிற்கு பிறகு இந்த வழக்கை மகன் ககன் சந்த் போத்ரா வழக்கை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த சட்டவிதிமீறுல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என தெரிவித்ததுடன், வழக்கில் தமிழக டிஜிபி-யை 5வது எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக அல்லது டிஜிபி அலுவலக உயர் அதிகாரியிடமிருந்து விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்..

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய அரசு மற்றும் மாநில அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக புகார் அளிப்பவர்கள் பாதிக்கபடக்கூடாது என தெரிவித்தார்.

மேலும் தற்போது பதவியில் உள்ள எம்.பி.,-க்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி ஓய்வுபெற்ற பின்னரும் பயன்படுத்துவதாகவும், அரசின் கடைநிலை ஊழியர்கள் வரை பயன்படுத்துவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அனைவரும் பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ செய்வார்கள் என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.

அதனால், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை
தடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்பாடுகள் மீது கான்ஸடபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளை தமிழக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
[12/14, 12:53] Sekarreporter 1: கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனை விட, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியை சேர்ந்த கே.ராகுல் காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தேர்தல் வழக்கில், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்…
[12/14, 14:48] Sekarreporter 1: திருவண்ணாமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான ராஜ்மோகன் சந்திரா கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி காலை 6 மணியளவில் சிலர் அவரை தாக்கி கொலை செய்தனர்.

இதுதொடர்பாக மனைவி ஆலயம்மா ஜோசப் அளித்த புகாரில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வெங்கடேசன், செல்வம், வீராசாமி, மீனாட்சி உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

2012 ஆகஸ்ட் 28ம் தேதியே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், பின்னர் திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்திற்கு 2014ஆம் ஆண்டு பிப்ரவரில் வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஆலேயம்மா ஜோசப் தொடர்ந்துள்ள வழக்கில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் நீதி விசார்னைக்கு உத்தரவிட வேண்டும், கணவர் அம்பலப்படுத்திய சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும், கணவரின் மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது மனுவில் தனது கணவர் ராஜ்மோகன் சந்திரா, காவல்துறை, வருவாய்த்துறை, வழக்கறிஞர்கள், மாஜிஸ்திரேட் ஆகியோரின் சட்டவிரோத செயல்பாடுகளையும், கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, மணல் திருட்டு தொடர்பாகவும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் ராஜ்மோகன் சந்திராவே ரியல் எஸ்டேட் தொடர்பான விவகாரங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும், காவல்துறை எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து செயல்பட்டதால், எதிரிகள் அதிகமான நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுமக்களின் நலனுக்காக போராடுபவர்களின் இதுபோன்ற கொலை வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்த வேண்டியது நீதிமன்றங்களின் கடமை என்றும் விசாரணையை தாமதிப்பது என்பது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என எச்சரித்துள்ளார்.

குறிப்பாக எட்டு வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படாமல், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக ஜனவரி முதல் வாரமே வழக்கை விசாரணைக்கு எடுத்து குற்றப்பத்திரிகை நகல்களை சம்பந்தபட்டவர்களுக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

விரைவாக விசாரணையை நடத்தி 6 மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டுமென திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
[12/14, 14:54] Sekarreporter 1: பெங்களூரு விமான நிலைய சம்பவம் தொடர்பான அவதூறு வழக்கில் நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைத்துறையில் நடிகராக இருந்து வரும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.
[12/14, 16:24] Sekarreporter 1: சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி பஞ்சாயத்து யூனியனின் தலைவராக உள்ள அதிமுகவை சேர்ந்த ஜெகந்நாதனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி பஞ்சாயத்து யூனியனின் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக வை சேர்ந்த ஜெகந்நாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

அவர் தன் மனுவில், பனைமரத்துப்பட்டி யூனியனிலுள்ள 13 ஒன்றிய கவுன்சிலர்களில் மூன்று கவுன்சிலர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தனக்கெதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வட்டார வளர்ச்சிஅலுவலருக்கு மனு அளித்ததன் பேரில் தனக்கெதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடந்த நவம்பர் 29 ம் தேதி உத்தரவிடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்

வட்டார வளர்ச்சி அலுவலர் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆராயாமல் ஆளும்கட்சியின் அரசியல் அழுத்தத்தின் காரணமாக அதிமுக வை சேர்ந்த தன்னை ஒன்றிய தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்பதில் அதீத அக்கறை காட்டுவதாகவும்,இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியயிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்

தன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும்,அந்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் கோரியுள்ள இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வளர்ச்சி அலுவலரின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்
[12/14, 17:48] Sekarreporter 1: பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு புகார்களை தீவிரமாக கருதி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய சக ஆண் ஊழியர் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2013ஆம் ஆண்டு பெண் ஊழியர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்த, முதலில் அமைக்கப்பட்ட குழு விசாரணையை தொடங்காததால், இரண்டாவது குழு அமைத்து அணு ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவிட்டது.

இந்த இரண்டாவது குழு விசாரித்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்த நிலையில், இந்த குழு விதிப்படி அமைக்கப்படவில்லை என, மூன்றாவது குழு அமைத்து உத்தரவிடப்பட்டது.

பாலினப் பாகுபாடான முறையில் செயல்படக்கூடியவர்களை கொண்டு, மூன்றாவது குழு அமைத்ததை எதிர்த்தும், இரண்டாவது குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் பெண் ஊழியர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டியது பணி வழங்வோரின் கடமை எனவும், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில், புகார் அளித்து ஏழரை ஆண்டுகள் கடந்தும் முடிவை எட்டவில்லை எனக் கூறிய நீதிபதி, இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணால் எப்படி திறமையாக பணியாற்ற முடியும் என கேள்வி எழுப்பியதுடன், விசாரணையை தாமதப்படுத்துவது என்பது கடமை தவறிய செயலாகவும் என்றும், குற்றமாகவும் கருதப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது குழு அமைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி சுப்ரமணியம், பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சட்டத்தை பின்பற்றி, புதிய குழுவை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த குழு 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்தால், குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீப காலங்களில் அதிகம் காணப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள நீதிபதி சுப்ரமணியம், இந்த குற்றச்சாட்டுகளை அரசு அதிகாரிகள் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.ders r

You may also like...