Madras high court orders december19-rti chairman muthuraj order

uthu: சென்னை மாநகராட்சியில் கடந்த காலங்களில், சரியாக அமைக்கப்படாத சாலைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், தங்கள் சொந்த செலவில் செப்பனிட உத்தரவிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பசுமை வழிச்சாலை கேசவபெருமாள் பிரதான சாலையை சீரமைக்க கோரி, சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் வீ.முருகேஷ் என்பவர், கடந்த அதிமுக ஆட்சியின்போது 2017 டிசம்பர் 6ம் தேதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த நடுவம், சாலையை சீரமைக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பான தகவலை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேஷ் அளித்த மனுவுக்கு பொது தகவல் அதிகாரி பதிலளிக்காததால், இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ்,
புகார் அளித்த நாளில் இருந்து, 2021 வரை 27 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 27 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க, அடையாறு மண்டல அலுவலரான தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், தமிழக அமைச்சர்களின் குடியிருப்புகள், அரசு இல்லங்கள் உள்ள முக்கியமான இந்த சாலை முறையாக அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் சாலைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்களை ஓய்வுபெற்ற ராணுவ பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

முறையாக அமைக்கப்படாத சாலைகளை, ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், சொந்த செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த பணிகள் ராணுவ பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை என்றால் சரியாக அமைக்கப்பட்டுள்ளதாக தவறான சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[12/19, 07:52] Sekarreporter 1: [12/18, 15:55] Sekarreporter 1: அவதூறு பரப்புதல் மற்றும்
மிரட்டல் விடுத்த வழக்கில் பிரபல பல் மருத்துவர் பாலாஜியிடம் மேல் விசாரணை நடத்த அனுமதிக்கோரிய காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையை சேர்ந்த பிரபல பல் மருத்துவர்களான குணசீலன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் இந்திய பல் மருத்துவர்கள் ஆராய்ச்சி சங்கம் மற்றும் சர்வதேச பல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த 2013- ஆம் ஆண்டு, பார்சிலோனாவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் டாக்டர் குணசீலன் கலந்துகொண்டு நாடு திரும்பிய நிலையில், அவரது நண்பரான டாக்டர் கிஷோர் நாயக் என்பவருக்கு வந்த மின்னஞ்சலில், டாக்டர் குணசீலனைப் பற்றி அவதூறான செய்திகள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து, அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இ-மெயிலை உருவாக்கியது டாக்டர் பாலாஜி மருத்துவமனையின் ஊழியர் ஜெயப்பிரகாஷ் மற்றும் டாக்டர் பாலாஜி என கூறி அவர்கள் மீது அவதூறு பரப்புதல், தவறான தகவலைப் பரப்பி மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி டாக்டர் பாலாஜி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்திலும் அவரது மேல் முறையீடு மனு தள்ளுபடியானது.

இந்நிலையில் டாக்டர் பாலாஜி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு எதிரான வழக்கு சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டாக்டர் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில், மேல் விசாரணை நடத்த அனுமதிக்கோரி காவல்துறை தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கை விசாரித்த 11 ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி, வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மேல் விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு விசாரணைக்கு டாக்டர் பாலாஜி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் வரும் 22ம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[12/18, 15:57] Sekarreporter 1: வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது எனவும், பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டுமெனவும் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மூத்த நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் பாராட்டு விழா நடைபெற்றது

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், எம்.கோவிந்தராஜ், ஜி.கே.இளந்திரையன், ஜெ. சத்திய நாராயண பிரசாத், உள்ளிட்ட நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், இந்திய, மாநில பார் கவுன்சில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், எவ்வளவு சிக்கலான வழ்க்காக இருந்தாலும் எளிதில் தீர்வு காணக்கூடியவர் நீதிபதி சுந்தரேஷ் என பாராட்டு தெரிவித்தார். நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் வழக்கறிஞர்கள் மீது இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பார் கவுன்சில் உறுப்பினரான ஆர்.விடுதலை பேசியபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் காவலர் என அனைவராலும் போற்றப்பட்டவர் என பாராட்டு தெரிவித்தார்.

இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன் பேசியபோது, சச்சினும், கோலியும் சேர்ந்த.ஒரு மனிதராக நீதிபதி சுந்தரேஷ் வழக்குகளை கையாண்டதாக தெரிவித்தார். நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பார் கவுன்சில் எப்போதும் தயங்காது என உறுதியளித்தார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் பேசிய, வழக்கறிஞர் சமூகம் கற்று தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு தீர்ப்புகளை வழங்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன், கூடுதல் நீதிபதியாக பதவியேற்றவுடன் நீதிபதி சுந்தரேஷ் தலமையிலான அமர்வில் இருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பேசியபோது இளம் நீதிபதிகளுக்கு கற்றுக்கொடுப்பதுடன், தீர்ப்புகள் எழுதவும் ஊக்குவித்தார் என தெரிவித்தார். MMS என்பதை Man of Marvelous Sundresh என்பது தான் சரியாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நீதிபதி என்.சேஷசாயி பேசியபோது, பின் வாச்ல வழியாக வந்த ஆங்கிலம், முன் வாசலில் தமிழை மறக்கத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். பதவி என்னும் உடையை மாட்டிக்கொண்டு கழற்ற மறுப்பவர்கள் உள்ள நிலையில், அந்த உடையை அணிந்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாதவர் நீதிபதி சுந்தரேஷ் என பாராட்டு தெரிவித்தார்.

நீதிபதி என்.சதீஷ்குமார் பேசியபோது, அனைத்து துறை சார்ந்த வழக்குகளிலும் முக்கிய தீர்ப்புகளை வழங்கி நீதித்துறையும், வழக்கறிஞர்களும் பலனடைய உதவிபுரிய வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு வலியுறுத்தினார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியபோது, நீதிபதி என்பதை தாண்டி மனிதம் என்ற உள்ளார்ந்த பண்பின் அடிப்படையில் மனிதராக நீதிபதி சுந்தரேஷ் கொண்டாடப்படுவார் என தெரிவித்தார். அவர் நேசிக்கும் தமிழ் கூறும் அறத்தையும், நீதியையும் கற்றுக்கொண்டு பேசுவதுடன் நிறுத்திவிடாமல் வாழ்விலும் பின்பற்றுபவர் நீதிபதி சுந்தரேஷ் என பெருமைபட தெரிவித்தார். தன்னுடன் 2009ல் பதவியேற்றவர்களை எப்படி சகோதரனாக நினைத்தாரோ, அதேபோலத்தான் சமீபத்தில் பதவியேற்ற இளம் நீதிபதிகளையும் சகோதரத்துடன் பழகுவார் என நீதிபதி சுந்தரேஷ் பின்பற்றும் அறநெறியை புகழ்ந்து பேசினார்.

நீதிபதி வி.பாரதிதாசன் பேசியபோது, மன எண்ணங்களுக்கு ஏற்ற உயர்வு, பிறருக்கு தீங்கிழைக்கக்கூடாது போன்ற வள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழும் நீதிபதி சுந்தரேஷ், மேலும் மேன்மையடைய வேண்டுமென வாழ்த்தினார்.

நீதிபதி டி.ராஜா பேசியபோது, சிறந்த தமிழாற்றல், சிறந்த நீதிபதி, சிறந்த மனிதநேயம் ஆகியவைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக சுந்தரேஷ் உயர காரணம் என தெரிவித்தார். மத்திய அரசும் , ராணுவமும் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று செயல்பட வேண்டிய நிலையில், குடியரசு தலைவருக்கு எழும் சட்ட சிக்கல்களை போக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமியும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

விழாவில் ஏற்புரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டெல்லியில் உள்ள குளிரை காட்டிலும், இங்குள்ள பாச மழையால் உடல் நடுங்குவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது என தெரிவித்ததுடன், பதவி ஆடை மாதிரிதான் என்றும், ஆனாலும் பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டுமென என குறிப்பிட்டார்.

நிலுவை வழக்குகள் இருந்தாலும், தாக்கலாகும் வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுட்டிக்காடியதுடன், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால் தான் நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.

எனவே மக்களை தேடிச்சென்று நீதி வழங்க வேண்டுமென தெரிவித்தார். உச்ச நீதிமன்ற கிளை அமைக்கும் விவகாரத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
[12/18, 16:20] Sekarreporter 1: அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதித்து வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் தனக்கு எதிராக திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி, குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரமில்லை என புகார் முடிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது, மூன்று வார்டு உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை கூறி, தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும், அதை ஏற்று மன்றக் கூட்டத்தை கூட்ட வருவாய் கோட்டாட்சியர் அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தீர்மானம் கொண்டு வர, மொத்தமுள்ள 13 உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்குக்கு குறையாத எண்ணிக்கையில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என விதிகள் உள்ள நிலையில், இந்த தீர்மானத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதால், சட்டப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க கூட்டத்தை கூட்ட வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்க கூடாது எனக் கூறி, அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
[12/18, 17:45] Sekarreporter 1: கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை முன்றாவது நபருக்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரியும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக் கோரியும் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ..இராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். 2001ஆம் ஆண்டு கோவிலுக்காக வாங்கப்பட்ட நிலத்தை வெங்கட்ராமன் என்பவருக்கு விற்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் பரம்பரை அறங்காவலர்களாக தேர்தலை நடத்தக் கோரி ஏ.ஆர்.திருப்பதி கவுண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராதாகிருஷ்ணன் தரப்பில் பிரதான சாலையிலுள்ள கோவிலுக்கு தினமும் அதிக பக்தர்கள் வருவதால் காணிக்கைகள் அதிகளவில் வருவதாகவும், ஆனால் அவற்றை முறையாக செலவிடுவதில் அறங்காவலர்கள் இடையே நிர்வாகிகள் குழப்பம் நிலவுவதாகவும் வாதிடப்பட்டது.

திருப்பதி கவுண்டர் தரப்பில் கோவிலின் அன்றாட பணிகளை முறையாக மேற்கொள்ள எதுவாக அறங்காவலர்கள் குழுவின் தலைவர் தேர்தலை நடத்த வேண்டுமென வாதிடப்பட்டது.

கோவில் செயல் அலுவலர் தரப்பில் கோவில் நிலம் விற்கப்பட்டது தொடர்பான பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டது. கோவிலின் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மொட்டை அழிப்பதற்கான இடம் ஆகிய இட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறங்காவலர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான கூட்டத்தை டிசம்பர் 22ஆம் தேதி நடத்த உள்ளதாக தெரிவித்ததுடன், வழக்கு தொடர்ந்துள்ள திருப்பதி கவுண்டர் கடந்த 2019ஆம் ஆண்டே அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால், வழக்கு தொடர அவருக்கு எவ்வித மாறுதலும் இல்லை என வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார் இரு வழக்குகளிலும் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானவற்றிற்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கை மூலம் தெளிவாவதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கோவிலின் அசையா சொத்துக்கள் 2001 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தனை ஆண்டுகளாக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல்.இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே கோவில் சொத்துக்கள் மூன்றாம் நபர்களுக்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்த தகுந்த அதிகாரியை நியமிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரி, கோவிலின் முந்தைய கால வரவு செலவுகளையும் ஆய்வு செய்து, 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/19, 07:53] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியில் கடந்த காலங்களில், சரியாக அமைக்கப்படாத சாலைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், தங்கள் சொந்த செலவில் செப்பனிட உத்தரவிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பசுமை வழிச்சாலை கேசவபெருமாள் பிரதான சாலையை சீரமைக்க கோரி, சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் வீ.முருகேஷ் என்பவர், கடந்த அதிமுக ஆட்சியின்போது 2017 டிசம்பர் 6ம் தேதி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த நடுவம், சாலையை சீரமைக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பான தகவலை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேஷ் அளித்த மனுவுக்கு பொது தகவல் அதிகாரி பதிலளிக்காததால், இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ்,
புகார் அளித்த நாளில் இருந்து, 2021 வரை 27 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 27 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க, அடையாறு மண்டல அலுவலரான தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், தமிழக அமைச்சர்களின் குடியிருப்புகள், அரசு இல்லங்கள் உள்ள முக்கியமான இந்த சாலை முறையாக அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் சாலைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்களை ஓய்வுபெற்ற ராணுவ பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

முறையாக அமைக்கப்படாத சாலைகளை, ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், சொந்த செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த பணிகள் ராணுவ பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை என்றால் சரியாக அமைக்கப்பட்டுள்ளதாக தவறான சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...