Madras high court orders june 1

[6/1, 13:55] Sekarreporter: திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையை யும் இணைக்கும் இடத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழக அரசுத்தரப்பில், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தவர் யார் என்ற விவரங்களை கூறாமல், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிரதான வழக்கு மற்றும் தடை நீக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[6/1, 15:34] Sekarreporter: மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருப்பதாகவும், ஆனால் வேலூர் சிறையில் இருக்கும் கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமெப மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
[6/1, 17:23] Sekarreporter: சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் உள்ள ஏரியை முறையாக பராமரிக்கபடுவதை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்கக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது

சென்னை அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திர ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 1968ல் சர்வதேச இந்திய வர்த்தக கண்காட்சி சென்னை அண்ணா நகரில் நடந்தபோது, மக்களை கவர்வதற்காக அண்ணா நகர் கோபுரத்துடன் கூடிய டவர் பூங்கா உருவாக்கப்பட்டு அப்போதைய துணை குடியரசு தலைவராக இருந்த வி.வி.கிரி மற்றும் முதலமைச்சர் அண்ணாதுரை ஆகியோர் துவக்கி வைத்ததாக தெரிவித்துள்ளார்.

15 ஏக்கருக்கும் மேல் உள்ள பூங்காவிற்குள் 12 மாடிகளுடன் 135 அடி உயரத்தில் கோபுரம் கட்டப்பட்டு சென்னை மாநகராட்சி பராமரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். பறவைகளை காணுமிடம், பேட்மிட்டன் மைதானம், நடைபயிற்சிக்கான இடம், குழந்தைகள் விளையாட்டுத் திடல், ஏரி ஆகியவை அமைந்துள்ளதாக குறிப்பிடுள்ளார்.

கடந்த 2010ல் பூங்காவை சீரமைக்க 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், பூங்காவில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களை அடுத்து கோபுரத்தில் ஏற தடைவிதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1990க்கு முன் பூங்காவிற்குள் இருந்த ஏரியில் படகு சவாரி, மீன் பிடித்தல் போன்றவை நடைபெற்றதாகவும், தற்போது ஏரியில் கழிவு நீர் கலக்க அனுமதிக்கப்பட்டதால், ஏரி முழுமையாக கருமையாக உள்ளதுடன், நச்சுத்தன்மை உடையதாக மாறியுள்ளதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏரியை மீட்டெடுக்க வகுக்கப்பட்ட திட்டங்களையும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் தாக்கல் செய்ய அரசுக்கும், மாநாகராட்சிக்கும் உத்தரவிட வேண்டுமெனவும், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், எந்த கழிவு நீரும் கலக்காத வகையில் ஏரியை பராமரிக்க வேண்டுமெனவும், ஏரி முறையாக பராமரிக்கப்படுவதை கண்காணிக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[6/1, 17:59] Sekarreporter: [5:58 PM, 6/1/2022] Mukesh Puthiyathaimurai Jounalist: குரூப் 1 முதல்நிலை தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க கோரிய மேல்முறையீடு வழக்குகளில் டி.என்.பி.எஸ்.சி. பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ஜனவரி மாதம் குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெற்றது, அதில் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெற்றது. 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டதில், 60 கேள்விகளுக்கான விடைகள் தவறு என கூறி, இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், நிபுணர் குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஒரு கேள்விகான பதில் மட்டும் தவறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து தேர்வர்களுக்கும் அதற்க்கான உரிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தனி நீதிபதி உத்தரவை எதிரித்து வேலுமணி, அமுதா, குரு பாண்டியன் உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு வழக்குகள் உயர்நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்களில், மாதிரி விடைகள் பற்றி விவாதிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், எந்த அடிப்படையில் ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தவறு என நிபுணர் குழு முடிவுக்கு வந்தது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் ஆய்வு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து, அனைத்து கேள்விகளையும் பதில்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு வழக்குகளில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபிக் அடக்கிய அமர்வு, வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[6/1, 18:06] Sekarreporter: கூடுதலாக பாமாயில் சப்ளை செய்யும்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெண்டர் கோரியிருந்தது.

ஒரு லிட்டர் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்த நிலையில், மே 3ம் தேதிக்குள் கூடுதல் பாமாயில் சப்ளை செய்யும்படி உணவு பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு பாமாயில் சப்ளை செய்யும் சென்னையை சேர்ந்த ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக்ஸ், ருச்சி சோயா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று தீர்ப்பளித்துள்ளார்.

வழக்கமாக, அரசுக்கு பாமாயில் சப்ளை செய்து வரும் மனுதாரர் நிறுவனங்களுக்கு சந்தை நிலவரம் நன்றாக தெரிந்திருக்கும் எனவும், பாமாயில் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 27ம் தேதி தான் இந்தோனேஷியா அரசு தடை விதித்துள்ளது என்ற போதும், அதற்கு முன்னதாக மார்ச் 2ம் தேதியே கூடுதல் பாமாயில் சப்ளை செய்ய கோரப்பட்டதால், அரசின் உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில், 2 லட்சம் லிட்டர் பாமாயில் சப்ளை தொடர்பாக கோரப்பட்ட டெண்டர் ஏப்ரல் 21ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 28ம் தேதி தான் திறக்கப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை விதித்துள்ளதாக கூறி டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை ஏற்ற நீதிபதி, அரசு உரிமையாளராக செயல்பட்டாலும் சரி, வாடகைதாரராக செயல்பட்டாலும் சரி, உண்மையாக செயல்பட வேண்டும் எனக் கூறி, டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[6/1, 22:33] Sekarreporter: திருமணமான இரண்டே ஆண்டுகளில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பூங்கா நகர் பல்லவன் சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜா மற்றும் சுதா தம்பதியின் குழந்தைக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.அதன்பிறகு திருமணத்தின்போது ஒத்துக்கொண்ட 5 சவரன் நகை, பிரிட்ஜ், வாசிங் மெஷின் ஆகியவற்றை தரவில்லை என ராஜாவும், அவரது சகோதரி ஆனந்தியும் சேர்ந்து சுதாவை கொடுமைபடுத்தி உள்ளனர். குழந்தையின் பிறந்தநாளுக்கு எடுத்த தங்க சங்கிலி, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றையும் தரவில்லை என்றும், வரதட்சணை கேட்டும் தொடர்ந்து கொடுமைபடுத்தி உள்ளனர்.

கணவர் குடிபோதையிலும் தாக்கியதாலும், அவரது குடும்பத்தினரின் வரதட்சனை கொடுமையாலும் மனமுடைந்த சுதா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் நடத்திய விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

சுதா தற்கொலை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது பரூக் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், ராஜாவுக்கு 10 அண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். அவரது சகோதரி ஆனந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.

You may also like...