திருமணமான இரண்டே ஆண்டுகளில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருமணமான இரண்டே ஆண்டுகளில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பூங்கா நகர் பல்லவன் சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜா மற்றும் சுதா தம்பதியின் குழந்தைக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.அதன்பிறகு திருமணத்தின்போது ஒத்துக்கொண்ட 5 சவரன் நகை, பிரிட்ஜ், வாசிங் மெஷின் ஆகியவற்றை தரவில்லை என ராஜாவும், அவரது சகோதரி ஆனந்தியும் சேர்ந்து சுதாவை கொடுமைபடுத்தி உள்ளனர். குழந்தையின் பிறந்தநாளுக்கு எடுத்த தங்க சங்கிலி, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றையும் தரவில்லை என்றும், வரதட்சணை கேட்டும் தொடர்ந்து கொடுமைபடுத்தி உள்ளனர்.

கணவர் குடிபோதையிலும் தாக்கியதாலும், அவரது குடும்பத்தினரின் வரதட்சனை கொடுமையாலும் மனமுடைந்த சுதா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் நடத்திய விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

சுதா தற்கொலை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது பரூக் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், ராஜாவுக்கு 10 அண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். அவரது சகோதரி ஆனந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.

You may also like...