Madras high court orders nov 14

[11/14, 11:04] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து வழக்கு…

விஜயின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

ஜாமீனில் விடுதலையாவதை தடுக்க உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்துள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு…
[11/14, 11:06] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஜூலை 13ம் தேதி பள்ளியில் கலவரம் வெடித்தது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலன் விசாரணைக்குழு, பலரை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கடந்த செப்டம்பர் 26ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தனது கணவரை விடுவிக்க கோரி அவரது மனைவி தமிழ்பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தனது கணவர் எந்த கலவரத்தையும் தூண்டாத நிலையில், இந்த ஒரே ஒரு வழக்கை மட்டும் வைத்து, மனதைச் செலுத்தாமல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஜாமீனில் விடுத்லையாவதை தடுக்கும் வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு நகல் ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கப்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக உள்துறை செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளது.
[11/14, 12:31] Sekarreporter 1: சென்னையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் தாமஸ் வழக்கு மீதான விசாரணை ரத்து…..

குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து சிபிசிஐடி காவல்துறை மீண்டும் விசாரணை நடத்த டிஜிபிக்கு செனரனை உயர்நீதிமன்றம் உத்தரவு…..

கடந்த 2017 ஆம் பெண் மருத்துவர் ரம்யா மற்றும் அவரின் சகோதரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சென்னை கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மருத்துவ மைய நிறுவனர் டாக்டர் தாமஸ் கைது….

தனக்கு எதிராக தவறான புகாரில் அடிப்படையில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ரத்து செய்ய வேண்டும் – மனுவில் தகவல்….

மனுதரார்க்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ரத்து – உயர்நீதிமன்றம்

சிபிசிஐடி உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் ஆய்வாளர்கள் அந்தஸ்து அதிகரியை கொண்டு மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் – நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவு….
[11/14, 12:42] Sekarreporter 1: சென்னை தனியார் கருத்தரிப்பு மைய உரிமையாளர் டாக்டர் தாமஸ் மீதான கொலை முயற்சி புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக இந்த வழக்குகளின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் இருந்து விலகி, தனியாக மருத்துவமனை துவங்கியதற்காக, கூலிப்படையினரை ஏவி தன்னை கொல்ல முயற்சித்ததாக டாக்டர் ரம்யா, அவரது சகோதரி நிர்மலா அளித்த புகார்களின் அடிப்படையில் செம்பியம் போலீசார் 2017ல் இரு வழக்குகளை பதிவு செய்தனர்.

முதல் வழக்கு தொடர்பாக மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தனக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், இரண்டாவது வழக்கை ரத்து செய்யக் கோரியும் டாக்டர் தாமஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்ததில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என தெரிய வருவதால், இரு புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிய, இரு வழக்குகளின் விசாரணையையும் சிபிசிஐடி – க்கு மாற்றி உத்தரவிட்டார்.
[11/14, 14:11] Sekarreporter 1: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சி எம் சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக இறுதி ஆண்டு பயிலும் 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், பாகாயம் போலீசார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சி எம் சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கல்லூரியில் ராகிங் குறித்து புகார் வந்ததும், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் ராகிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக காவ்ல் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் விளக்கினார்.

தொடர் விசாரணையில் ஏழு மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சட்டப்படி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும், கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும், ராகிங்கை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், ராகிங் தடுப்பு சட்டங்கள் பின்பற்றப்படுவதாகவும் விளக்கினார்.

இதையடுத்து, பெயர் பெற்ற கல்வி நிறுவனமான சி எம் சி யில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இதுசம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாகவும், அதன் அடிப்படையில் பொறுப்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சி எம் சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம் எனவும், ஒழுக்கம் இல்லாமல், மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சி எம் சி மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[11/14, 16:17] Sekarreporter 1: கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் தந்தைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். அந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம், அதன் அறிக்கைகளை பெற்று ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்ஃபோனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை எனவும், அதை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார். உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் என தெரிவித்ததுடன், நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[11/14, 17:00] Sekarreporter 1: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற போது மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை
செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி.-யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது..

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
[11/14, 17:21] Sekarreporter 1: நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாகவும் அவரின் இருபபிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல் துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்க இருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க முயற்சித்து வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து எந்த விபரங்களும் கிடைக்கவில்லை எனவும் அவரின் மொபைலும் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டு வருவதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். சுதாகர் தெரிவித்தார்.

தற்போது அவர் எங்கிருக்கிறார் என அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தெரியவில்லை எனவும், அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் விசாரணை டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

You may also like...