Madras high court orders sasthira and kovil case admk case orders click the below link

[9/6, 15:03] Sekarreporter1: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டீசுவரர் கோவிலில் முறையாக அனுமதிபெறாமல், விதிகளை மீறி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் உத்தரவிட்டுள்ளது.

திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கீழ் படப்பையில் அமைந்துள்ள அருள்மிகு வீரட்டீசுவரர் சுவாமி திருக்கோயிலில் அனுமதி பெறாத திருப்பணிகள் நடைபெறுவதுடன், கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொன்மையான கல்வெட்டுக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ராஜகோபுர திருப்பணிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் பல ஆண்டுகளாக பணிகள் நடைபெறுவதாகவும், பதிவேடுகள் முறையாக பேணப்படாத நிலையில் தனி நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க திருக்கோயிலின் செயல் அலுவலரால் சட்டவிரோதமாக ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, நிர்வாகம் ஆகிவற்றிற்கு ஜூலை 1ஆம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உற்ற்தவிட்டுள்ளனர்.
[9/6, 15:23] Sekarreporter1: நீட் தேர்வு விடைத்தாள் மாறி விட்டதாக மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் உண்மையான விடைத்தாளை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் தனது விடைத்தாள் மாறி விட்டதாக கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேர்வில் 720க்கு 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்வில் 13 கேள்விகளுக்கு மட்டும் தான் விடையளிக்காத நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்கப்படாமல் விடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாளின் இடது புறம் இடம்பெற்றிருந்த தனது சுய விவரங்கள் அடங்கிய பகுதி வேறு மாணவி விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என மாணவி தனது சந்தேகம் தெரிவித்துள்ளார்.

விடைத்தாளில் உள்ள கைரேகையை சரி பார்த்தால் தனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும் எனவும், தனது விடைத்தாளை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், தன்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கும்படி உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர் சரவணன், விடைத்தாள் மாறியுள்ளது,மனுதாரரின் விடைத்தாள் கிடையாது,உண்மையான விடைத்தாளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.. தேசிய தேர்வு முகமை சார்ந்த வழக்கறிஞர் நீட் தேர்வு முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் .இரு தரப்பு வாதங்களுக்கு கேட்ட நீதிபதி மாணவியின் உண்மையான விடைத்தாளை வரும் 13ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளார்..
[9/6, 15:53] Sekarreporter1: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகப்பன் மீதான மூன்று வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் உடைய அமைச்சராக உள்ள பெரிய கருப்பன் மீது, கடந்த அதிமுக ஆட்சியில் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டிருந்த து… கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியது, சட்டமன்ற தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது, அனுமதி இல்லாமல் கட்சி அலுவலகத்தை திறந்தது என மூன்று வழக்குகள் காவல்துறை பதிவு செய்யப்பட்டிருந்த து..
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி பெரியகருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது ..அப்போது அமைச்சர் சார்பில் வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜராகி, நீட் போராட்டம் என்பது ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டம் என்றும் இதில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கடந்த அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டதாக குறிப்பிட்டார்.. தேர்தல் வழக்குகளைப் பொறுத்தவரை , தான் வேட்பாளர் என்றும் மற்ற வாகனங்கள் வந்த து குறித்து தனக்கு தெரியாது எனவே மூன்று வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, அமைச்சர் பெரியகருப்பன் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்…
[9/6, 16:43] Sekarreporter1: நெல் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களின் பணியில் உணவுத் துறை அமைச்சரின் மைத்துனர் தலையீட்டை தடுக்கக் கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் உள்ள வாக்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், இந்த ஆண்டுக்கான கொள்முதல் பணிகள் ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்கிய நிலையில், உணவுத்துறை அமைச்சர் எம்.ஆர் கே. பன்னீர்செல்வத்தின் மைத்துனரான ஆர். கனகசபை என்பவர் கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தடுப்பதாகவும், அவரது ஆட்கள் மூலம் மட்டுமே நெல்லை ஏற்றி இறக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதாகவும் கூறி, 14 சுமை தூக்கும் தொழிலளர்கள் சார்பாக சி. பட்டுசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர், தொழிலாளர் நலஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஆகஸ்ட் 22ம் தேதி புகார் அளித்தும், தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் வாழ்வாதார பணியில், தலையிடுவதை தடுக்கவும், வாக்கூர் நெல் கொள்முதல் நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. கே. இளந்திரையன், தமிழக அரசு, கடலூர் மாவட்ட காவல்துறை உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை தள்ளிவைத்துள்ளார்.
[9/6, 17:13] Sekarreporter1: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்படும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த 35 ஆண்டுகளாக அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தையே தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால், அதை அகற்ற வேண்டும் என அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதி நீர்நிலை என்பதற்கு வருவாய் துறை ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் எந்த நீர்நிலையும் இல்லை என சாஸ்த்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலம் நீர்நிலையா, எந்த பகுதி நீர்நிலையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அர்சுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அரசின் அறிக்கைக்கு சாஸ்த்ரா பதிலளிக்க அனுமதித்த நீதிபதிகள், அதன் பின் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என சுதந்திரமான முறையில் மதிப்பீடு செய்யப்படும் எனவும் உத்தரவிட்டனர்.
[9/6, 17:26] Sekarreporter1: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக அலுவலக கலவரம், சூறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை எனவும், குற்றச் செயல் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிடாதது அதிர்ச்சியளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், கடுமையான குற்றங்கள் இருந்தபோதிலும், விசாரணையைத் தொடங்குவதில் சிபிசிஐடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்கள் மீது தெளிவான ஆதாரம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

திருடப்பட்ட பொருட்களை மீட்பதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேலும், தெளிவான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் குற்றச் செயல் நடந்த இடத்தை புலனாய்வுக் குழு பார்வையிடாததால், பிரதான எதிர்க்கடையின் தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறி, இதனால் ஆளும் ஆட்சிக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தான் தன்னிச்சையான விசாரணை குழு கேட்டதாகவும், முறையாக விசாரணை நடத்தாமல், காவல்துறை ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவது என்கிற தனது குற்றச்சாட்டுக்கு அதன் செயல்பாடின்மையே சான்றாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கொண்டு சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தும்படி தகுந்து உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி தவறினால், வேறொரு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது கட்டாயமாகிறது என வலியுறுத்தி உள்ளார்.

எனவே, அதிமுக தலைமை அலுவலம் சூறையாடபட்ட விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்

இந்த கூடுதல் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
[9/6, 17:53] Sekarreporter1: 🕷️நடிகை அமலாபாலை ஏமாற்றி மிரட்டியதாக புகாரில் கைது செய்யப்பட்ட படத்தயாரிப்பாளருக்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் அமலாபால் மற்றும் அவரது ஆண் நண்பர் பவீந்தர் சிங் என்ற இருவரும் தங்கி சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் , அமலாபாலுக்கு கடந்த 2018ம் ஆண்டிலிருந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், திரைப்படத்துறையிலிருந்து தனக்கு வரவேண்டிய பணத்தில்மோசடி செய்ததாகவும் அமலாபாலின் மேலாளர் விக்னேஷ் 15 பக்கங்கள் கொண்ட புகாரினை விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் கடந்த 30ம் தேதி சினிமா தயாரிப்பாளர் பவீந்தர் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது மிரட்டல் மோசடி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பவீந்தர் சிங்கை கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீன் கோரி பவீந்தர் சிங் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அமலாபாலுக்கும் தனக்கும் நடந்த பதிவு திருமணத்திற்கான சான்றிதழை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பவீந்தர் சிங்கிற்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.🕷️
[9/6, 17:53] Sekarreporter1: முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த முத்தாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 11வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்ற அதிமுக-வை சேர்ந்த தர்மர் பேரூராட்சியின் தலைவராக தேர்வானதாகவும், பின்னர் ராஜ்யசபா உறுப்பினராக தர்மர் தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து 11வது வார்டு உறுப்பினர் பதவி காலியான நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சியின் சேர்மன் பதிவியும் காலியானது,இந்நிலையில் 11வது வார்டுக்கு தேர்தல் வைக்காமல் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தலை நடத்தப் போவதாக ஆகஸ்ட் 24 ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது சட்டத்திற்கு புறமானது என்பதால், அந்த அரசாணை ரத்து செய்து முதுகுளத்தூர் பேரூராட்சியின் 11வது வார்டுக்கு தேர்தல் நடத்திய பின்பு, சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், இன்று நடக்க இருந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக தள்ளிவைத்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு குறித்த மாநில தேர்தல் ஆணையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...