Madurai high court orders january 7

 

மதுரை ,திண்டுக்கல், இராமநாதபுரம்,புதுக்கோட்டை ,திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் ரேசன் அரிசியை கடத்திய போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க கோரி வழக்கு*

பல்வேறு நிபந்தனைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு*

வாகன உரிமையாளர்கள் தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்திற்கு நலத்திட்ட உதவியாக தலா 5ஆயிரம் ரூபாய் வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை ,திண்டுக்கல், இராமநாதபுரம்,புதுக்கோட்டை
திருநெல்வேலி மாவட்டத்தில் ரேசன்
அரிசியை கடத்தி கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை திருப்பித் தரக்கோரி பலர் உயர்நீதிமன்ற மதுரை கலையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இதுபோன்ற பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல் நிலையங்களில் வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. தேவைப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை எந்த நேரத்திலும் திரும்பப் பெறுவதற்கான தகுந்த உத்திரவாத பத்திரம் மற்றும் பாதுகாப்பை பெற்றுக்கொண்டு உடனடியாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். என்ற உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்பை சுட்டிக்காட்டி
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தார்.

வாகன உரிமையாளர்கள் தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக முதன்மை மாவட்ட நீதிபதி வங்கி கணக்கில் தல 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

விசாரணைக்கு வாகனத்தை அழைக்கும் போது, ​​மனுதாரர் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஆஜர்படுத்த வேண்டும். மேலும் விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போன்ற நிபந்தனைகளை வழங்கி மனுதாரரிடம் வாகனத்தை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

=

ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கி போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது ஏன் நீதிபதிகள் கேள்வி*

ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு*

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தால்

அதில்” திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஏற்கனவே பாலமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பவர்களுக்கு
உரிய அறிவிப்பு நோட்டிஸ் வழங்கப்பட்டு, காலஅவகாசம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேடசந்தூர் பகுதியில் உள்ள எங்களது பகுதியை ஆக்கிரமிப்பு எனக் கூறி எந்தவிதமான அறிவிப்பும், கால அவகாசமும் வழங்காமல் அதனை அகற்றும் படி வடமதுரை பஞ்சாயத்து வட்டார அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனவே பஞ்சாயத்து அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்

இந்த மனுவை விசாரித்து நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு விசாரணைக்கு வந்தது விசாரணை செய்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு முறையான கால அவகாச வழங்கி உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு உள்ளது ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய கால அவகாசம் வழங்காமல் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளார் எனவே நீதிமன்ற உத்தரவை ஏன் முறையாக செயல்படுத்தவில்லை என்பது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

=

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.*

*திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ஆகியோரை சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*

கிரேட் 2 பணியிலிருந்து BT அசிஸ்டன்ட் பணி உயர்வுக்கான மனுவை 8 வாரத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உத்தரவு.

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “பாளையங்கோட்டை பகுதியிலுள்ள சேவியர் மேல்நிலைப் பள்ளியில் கிரேட் 2 ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் B.T. அசிஸ்டன்ட் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருந்தும் எனக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை.

இது தொடர்பாக 2020ல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்து 8 வாரத்திற்குள் எனது மனுவை பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை.

எனவே, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது
திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை.

இதனையடுத்து நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு ஜாமீனுடன் கூடிய பிடிவாரண்டை பிறப்பித்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
உத்தரவிட்டுள்ளார்..

You may also like...