திருமாவலவன் Seek reservation Case against appointment of gov advts dismissed chef bench mhc நோ இடதுக்கீடு

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அரசு வழக்கறிஞர் பணியில் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், பழன்க்குடியினர் , மகளிருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் உட்பட 132 அரசு வழக்கறிஞர்கள் உள்ள நிலையில், பட்டியலினத்தவர்களுக்கு 19 சதவீதம் இடஒதுக்கீடு அல்லது மொத்த பணியிடங்களில் 25 சதவீதம் என பிரநிதித்துவம் வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

மேலும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், அரசு வழக்கறிஞர்ளை தேர்வு செய்யும் குழு எப்படி அமைக்கப்படுகிறது என்று தெளிவாக கூறப்படவில்லை. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

You may also like...