sekarreporter1: https://youtu.be/5qnoqd-J9nk [6/22, 07:20] sekarreporter1: உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை பொறுப்பாகவே கருதுகிறேன் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி கே வி விஸ்வநாதன் தெரிவித்தார்.

[6/22, 07:20] sekarreporter1:

 

 

 

 

 

[6/22, 07:20] sekarreporter1: உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை பொறுப்பாகவே கருதுகிறேன் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி கே வி விஸ்வநாதன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கேவி விஸ்வநாதன் அண்மையில் நியமிக்கப்பட்டார் அவருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பி மானே வில்சன் மூத்த வழக்கறிஞர் பி எஸ் ராமன் விடுதலை மற்றும் பிரபாகரன் ஆகியோர் நீதிபதி விஸ்வநாதனை பாராட்டி பேசினர்.

அப்போது அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட 10 வழக்கறிஞர்களில் விஸ்வநாதனும் ஒருவர் என்றும் தமிழகத்தில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள மூன்றாவது தமிழர் இவர் என்றும் குறிப்பிட்டனர்

தமிழக தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் பேசும்போது ராஜீவ் காந்தி படுகொலை பின்னணியில் உள்ள சதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் ஆஜரான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழில் அளித்த வாக்குமூலத்தை உடனடியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் நீதிபதி விஸ்வநாதன் என்றும் இதற்காக கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, கேவி விஸ்வநாதனின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்று பாராட்டி வாழ்த்தினார்

இறுதியாக ஏற்புரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், 1988 ஆம் ஆண்டு இங்கு தன்னுடைய பயணம் தொடங்கியதாகவும் கடின உழைப்பு எதிர்பாராத பரிசுகளை தரும் என்றும் குறிப்பிட்டார்

ஆண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் வழக்கறிஞர்கள் பதிவு செய்யக்கூடிய நிலையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் என்னால் முடியும் போது உங்களாலும் முடியும் என்று இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுரை கூறினார்

உச்சநீதிமன்ற நீதிபதி பதவியை பொறுப்பாகவே கருதுவதாகவும் பதவியாக கருதவில்லை என்றும் குறிப்பிட்ட அவர் இளம் வழக்கறிஞர்களின் நலனை மூத்த வழக்கறிஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தொடர் கல்வி மிக முக்கியம் என்றும் அதற்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்தினார்.

You may also like...