Senthil balaji /Ed n ramesh and for senthil balaji gowtham and barani kumar

[26/04, 08:27] sekarreporter1: சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக, அமலாக்கத் துறை adv ed n ramesh குற்றம் சாட்டியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக, எம்.பி.– எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பதில்மனுவில், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யும் நிலையில், விசாரணயை முடக்கும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் முக்கிய பங்காற்றியுள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[26/04, 08:27] sekarreporter1: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஏப்ரல் 30ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

அந்த ஆவணங்கள் கிடைத்த பின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று கடந்த 22ம் தேதி வங்கி தொடர்பான அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் நேரில் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மனு மீதான வாதம் நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்றது.

அப்போது செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் மா.கெளதமன் ஆஜராகி,
தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆவணத்திற்கும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறினார்.

காசோலை, செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி, மாதம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அதனை நிபுணர் குழுவின் ஆய்வுக்கோ அல்லது தடயவியல் சோதனைக்கோ உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி,
ஆவணங்களில் எந்த வேறுபாடும் இல்லை எனவும் ஆவணங்களை
திருத்தவும் இல்லை என்றார்.

அசல் ஆவணங்களை வங்கி வழங்கியது தங்களுக்கு சாதகமானது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், அசல் ஆவணங்கள் மஞ்சள் நிறத்திலும், நகல் எடுக்கப்பட்ட ஆவணங்கள் கருப்பு, வெள்ளை நிறத்திலும் உள்ளன என்பதை தவிர அனைத்து குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை மீது செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாக நகைச்சுவையுடன் கூறினார்.

இம்மனு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மனு மீதான உத்தரவை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...