அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. navj

அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த திமுக, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி, அதை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் கடந்த 2021ம் ஆண்டு சென்னை சாஸ்திரி நகரில் முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், தென் சென்னை மாவட்ட செயலாளர் நூர் ஜஹான், வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.அசோக், கணேசன் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெ.ஜெயவர்த்தன், வைகை செல்வன் உள்ளிட்ட 4 பேர் மீது சாஸ்திரி நகர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரி எம்.பி.ஜெயவர்த்தன், வைகை செல்வன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...