அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு cheif bench tasmac bar

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட நான்கு பார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கலால் துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் பார்கள் செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போதைக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி, திடீர் சோதனைகள் நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்

You may also like...